தமிழக தலைவர்களுக்கு ஆபத்தான டிசம்பர் மாதம்… உண்மையாலுமே இது கருப்பு மாதம் தான்…!!

Author: Vignesh
29 December 2023, 6:31 pm

கடந்த சில வருடங்களாக வருட கடைசி ஆனாலே இயற்கை சீற்றங்களும் தலைவர்களின் மரணமும் நடப்பது டிசம்பர் மாதத்தில் வாடிக்கையாகிவிட்டது. தமிழகத்தில் அரசியல் திரைத்துறையில் ஆளுமை செலுத்திய முக்கிய தலைவர்கள் பலர் டிசம்பரில் தான் மரணம் அடைந்தனர்.

Periyar

அந்த வகையில், தந்தை பெரியார் என்றாலே சாதி ஒழிப்பு போராளி, சுயமரியாதைக்காரர், பெண்ணியவாதி, கடவுள் மறுப்பாளர் என பல வழிகளில் செயல்பட்டவர். இவர் 1879 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17ஆம் தேதி ஈரோட்டில் பிறந்தார். இவர் தனது 94 வயதில் 1973 டிசம்பர் 24 இயற்கையை எய்தினார்.

mGr

எம். ஜி. ஆர் என்ற பெயரில் புகழ் பெற்ற, மருதூர் கோபாலன் இராமச்சந்திரன் (எம். ஜி. இராமச்சந்திரன், 17 ஜனவரி 1917 பிறந்தார். தமிழ்த் திரைப்பட நடிகராகவும் 1977 முதல் இறக்கும் வரை தமிழ்நாட்டின் தொடர்ந்து மூன்று முறை முதலமைச்சராகவும் இருந்தவர். நடிப்பின் மூலம் பல நல்ல கருத்துக்களை மக்களிடையே கொண்டு சென்றவர் எம்.ஜி.ஆர். பள்ளி குழந்தைகளின் பசியாற்றிய பெருமை இவரையே சாரும். பிரச்சாரத்திற்கே வராமல் முதலமைச்சரான ஒரே தலைவர் எம்.ஜி.ஆர். இவர் 1987 டிசம்பர் 24-ல் தனது 70 வயதில் இயற்கை எய்தினார்.

Jayalalitha

ஜெ. ஜெயலலிதா 24 பிப்ரவரி 1948 பிறந்தார். முன்னாள் தமிழக முதல்வரும், அரசியல் தலைவரும், பிரபல முன்னாள் தென்னிந்தியத் திரைப்பட நடிகையும் ஆவார். இவர் தமிழக முதலமைச்சராக ஆறு முறை பதவி வகித்துள்ளார். அரசியலுக்கு நுழைவதற்கு முன்னர் இவர் 120 க்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்கு, கன்னட மொழித் திரைப்படங்களில் முன்னணிப் பாத்திரங்களில் நடித்திருந்தார். இவரை “புரட்சித் தலைவி” எனவும் “அம்மா” எனவும் இவரது ஆதரவாளர்கள் அழைத்தனர்.தனது தொட்டில் குழந்தை திட்டத்துக்காக ஐக்கிய நாடுகள் சபையில் (ஐ.நா சபை) மத்தியில் கைதட்டைப் பெற்ற இந்தியாவை சார்ந்த முதல் பெண் முதலமைச்சர் இவரே ஆவார். இன்றளவும் அதிமுகவின் வாக்கு ஈர்ப்பாக நிலைத்து நிற்கும் இவர் தனது 68 வயதில் 2016 டிசம்பர் 5, இயற்கை எய்தினார்.

vijayakanth

நடிகரும் தேமுக தலைவருமான விஜயகாந்த் நேற்று இயற்கையை எழுதினார். இவர் 25 ஆகஸ்ட் 1952 ல் பிறந்தார். தனது 71 வது வயதில் 28 டிசம்பர் 2003இல் இயற்கை எய்தினார். தேமுதிக கட்சியின் தலைவராக மட்டுமே இன்றளவும் நடிகராக நல்ல மனிதராக தொடர்ந்து நீடித்து வந்த விஜயகாந்த் மறைவும் இதே டிசம்பர் மாதத்தில் தான் நடைபெற்று உள்ளது வேதனையை அளித்துள்ளது.

choramaswamy

இவர்களை போல்தான் மூத்த பத்திரிக்கையாளரும் நடிகருமான சோவும் டிசம்பரில் மரணம் அடைந்தார். அரசியல் சாணக்கியராக அறியப்படும் சோ, கடந்த 2016ம் ஆண்டு டிசம்பர் 7ம் தேதி மரணம் அடைந்தார்.

இதுவரை சுனாமி, நிலநடுக்கம், பெருமழை, வெள்ளம், புயல் போன்ற இயற்கை சீற்றங்கள் டிசம்பர் மாதத்தில் தான் வந்தன. கடந்த 2015 ஆம் ஆண்டில் டிசம்பரில் தான் பெரு வெள்ளம் வந்தது. அதன் பின்னர் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பரில் இயற்கை சீற்றங்கள் வருவது வாடிக்கையாகியுள்ளன. தலைவர்கள் திரை நட்சத்திரங்கள் பலர் டிசம்பரில் தான் மரணம் அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

  • Viduthalai Part 2 OTT releaseஅவ்ளோ தான் முடிச்சு விட்டீங்க போங்க…விடுதலை 2 ஓடிடி-க்கு ஓட்டம்..வெளிவந்த அப்டேட்..!
  • Views: - 451

    0

    0