தீபாவளிக்கு வேட்டையன், கோட்? சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் ரீசண்ட் மூவிஸ்!
Author: Udayachandran RadhaKrishnan24 October 2024, 1:16 pm
வரும் அக்டோபர் 31ஆம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சமீபத்தில் ரிலீசான படங்கள் சின்னத்திரையில் ஒளிபரப்பாவது ரசிகர்களிடைய ஷாக்கை ஏற்படுத்தியுள்ளது.
தீபாவளி பண்டிகை என்றாலே புத்தாடைகள், இனிப்புகள், பட்டாசுகள் என ஒருபுறம் இருந்தாலும் புதுபடங்களை காண தியேட்டருக்கு படையெடுப்பது வழக்கம்.
ஆனால் பல டிவி சேனல்கள் மக்களை டிவி முன்னாடி கட்டிப்போட போட்டி போட்டு புதுப்பட்ங்களை ஒளிபரப்புவார்கள்.
அப்படித்தான் சமீபத்தில் தனுஷ் நடிப்பில், ஏஆர் ரகுமான் இசையமைப்பில் வெளியான ராயன் திரைப்படத்தை சன் டிவி ஒளிபரப்புகிறது.
அதே போல கமல் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வந்த வேகத்திலேயே தியேட்டரை விட்டு வெளியேறிய இந்தியன் 2 படம் கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகிறது.
விஜய் சேதுபதி நடித்து 100 கோடி ரூபாய் வசூல் செய்த மகாராஜா படம் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிறது.
அதே போல செம ஹிட் ஆன டிமாண்டி காலனி 2 திரைப்படம் வரும் 31ஆம் தேதி ஜி தமிழ் தொலைக்காட்சியல் ஒளிபரப்பாக உள்ளது.
தீபாவளி அன்று வீட்டிலேயே இருந்துவிடலாம் போல என சினிமா ரசிகர்கள் பேசுகின்றனர். அதே போல கோட், வேட்டையனும் போட்டிருந்தால் இன்னும் கொஞ்சம் பெட்டரா இருந்திருக்கும் என விமர்சிக்கின்றனர்.