புத்தாண்டில் காதலை அறிவிச்ச சீரியல் நடிகை…வீடியோ வெளியிட்டு இன்ஸ்டா பதிவு..!
Author: Selvan1 January 2025, 3:07 pm
அரவிந்த் சேஜுவுடன் காதல் உறவு
சன் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் வணக்கம் தமிழா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் VJ சங்கீதா தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் தன் காதலுடன் ரீல்ஸ் எடுத்து,அதை வீடியோவாக பதிவிட்டு காதலை வெளிப்படுத்தியுள்ளார்.
இவர் “கனா காணும் காலங்கள்” வெப் தொடரில் மலர் கதாபாத்திரத்தில் நடித்து பின்பு அதிலிருந்து விலகினார்.அதன்பிறகு தமிழும் சரஸ்வதியும் சீரியல் தொடரில் வசுவாக நடித்து மக்கள் மத்தியில் பிரபலம் ஆனார்.
இதையும் படியுங்க: 2025-ல் கோலிவுட்டை கலக்க போகும் இளம் நடிகைகள்…பெரும் எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!
இவர் தன்னுடன் கனா காணும் காலங்கள் வெப் தொடரில் ஒன்றாக நடித்த நடிகர் அரவிந்த் சேஜுவை காதலிப்பதாக தற்போது அறிவித்துள்ளார்.
இவருடைய பதிவிற்கு ரசிகர்கள் பலர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.மேலும் அரவித் சேஜுவ் தற்போது சினிமா மற்றும் குறும்படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.