சன் டிவியின் முக்கிய சீரியலில் இருந்து விலகிய பிரபல நடிகை…இன்ஸ்டா பதிவால் சோகத்தில் ரசிகர்கள்..!
Author: Selvan16 January 2025, 6:08 pm
ஆனந்த ராகம் சீரியலில் இருந்து விலகிய அபி
தமிழ் சீரியல்களில் காலம் காலமாக நடிகர் நடிகைகைகள் தாங்கள் நடித்து வரும் சீரியல்களில் இருந்து விலகுவது நீடித்து கொண்டு இருக்கிறது.
சில பேர் தங்களுடைய தனிப்பட்ட காரணங்களாலும் வேறு சிலர் வேற ஏதாவுது புது சீரியலில் நடிக்க கமிட் ஆகி விடுவதால்,ஏற்கனவே நடித்து கொண்டிருக்கும் சீரியலில் இருந்து விலகி விடுகின்றனர்.
அந்த வகையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஆனந்த ராகம் சீரியலில் அபி கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஸ்வேதா,தற்போது சீரியலில் இருந்து விலகுவதாக தன்னுடயை இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று நல்ல டிஆர்பி-யில் இருக்கும் ஆனந்த ராகம் சீரியலில் இருந்து இவர் விலகுவது ரசிகர்களை அதிர்ச்சியாக்கியுள்ளது.
இதையும் படியுங்க: சைஃப் அலி கான் வீட்டில் நடந்தது என்ன… கேமராவில் வெளிவந்த அதிர்ச்சி சம்பவம்..!
அவர் வெளியிட்டுள்ள பதிவில் 750 எபிசோடு என்னுடைய ரோல் முடிகிறது.இந்த சீரியலில் அபியாக என்னை கொண்டாடிய அணைத்து ரசிகர்களுக்கும்,என்னுடைய டீமுக்கும் ரொம்ப நன்றி,நீங்கள் கொடுத்த அளவில்லா அன்பிற்கு இந்த அபி எப்போதும் கடமைப்பட்டுள்ளேன் என தெரிவித்துள்ளார்.
மேலும் என்னுடைய வாழ்க்கையில் மிக முக்கியமான தருணம் வர போகிறது என்று கூறியுள்ளார்,இதனால் நடிகை ஸ்வேதாக்கு விரைவில் திருமணம் ஆக வாய்ப்பு உள்ளது என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.