தவெக மாநாட்டில் பிரபல நடிகைக்கு முக்கிய பதவி வழங்கும் விஜய்.. முக்கிய முடிவெடுக்கும் சங்கீதா!

Author: Udayachandran RadhaKrishnan
20 October 2024, 4:37 am

பிரபல நடிகர் விஜய், சினிமாவில் இருந்து விலக உள்ளதாக அறிவித்தார். தனது கடைசி படமாக தளபதி 69 இருக்கும் என்றும், அத்துடன் சினிமாவுக்கு முழுக்கு போடுவதாக கூறியிருந்தார்.

தீவிர அரசியலில் களமிறங்கும் விஜய், தனது தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் மாநாட்டை வரும் 27ஆம் தேதி விக்கிரவாண்டியில் நடத்துகிறார்.

அதிக ரசிகர்கள் பலம் கொண்ட விஜய், மாநாட்டை சிறப்பாக நடத்த முடிவு செய்துள்ளார். மழைக்காலம் என்பதால் மாநாடு பாதிக்கப்படக்கூடாது என்பதில் கவனம் செலுத்தி வருகிறார்.

இதையும் படியுங்க: பிக்பாஸில் இருந்து வெளியேறிய அர்னவ்… குஷியில் குத்தாட்டம் போட்ட Ex மனைவி – வீடியோ !

இதனிடையே விஜய்க்கும் திரிஷாவுக்கும் சம்திங் சம்திங் என செய்திகள் வெளியானது. ஆனால் விமர்சனங்களுக்கு பதில் கொடுக்காமல் தன்னோட இலக்கை நோக்கி விஜய் செயல்பட்டு வருகிறார்.

இந்த நிலையில் மாநாட்டில் பிரபல அரசியல் கட்சியில் உள்ள முக்கிய தலைவர்கள், சினிமா பிரபலங்கள் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது.

யாரெல்லாம் பங்கேகிறார்கள் என்பதை பார்க்க அரசியல் கட்சிகளும், ரசிகர்களும், பொதுமக்களும் ஆவலோடு உள்ளனர். இந்த நிலையில் திரிஷாவுக்கு முக்கிய பதவியை விஜய் கட்சி மாநாட்டில் கொடுக்க உள்ளதாக ஒரு செய்தி உலா வருகிறது.

இதைக் கேள்விப்பட்ட விஜய் மனைவி சங்கீதா இதைப் பற்றி எதுவும் கண்டுகொள்ளவில்லையாம். மாறாக அவர் மாநாட்டில் பங்கேற்பாரா என்பது சந்தேகம் தான் என தகவல் வெளியாகியுள்ளது.

  • நான் பார்க்காத பிரச்சனையா..’டிராகன்’ பட இயக்குனருக்கு சிம்பு கொடுத்த தரமான அட்வைஸ்.!