சுதா கொங்கராவின் அடுத்த படத்தை தயாரிக்கும் கேஜிஎப் தயாரிப்பாளர் : திரும்பவும் இந்த நடிகர் தான் ஹீரோவாம் !!

Author: kavin kumar
21 April 2022, 3:57 pm

கேஜிஎப் 2 படம் கடந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது .Pan india திரைப்படமான இது இந்தியா முழுவதும் வெளியாகி வசூல் சாதனைகள் புரிந்து வருகிறது. தற்போது இந்திய பாக்ஸ் ஆபிஸை அதிரவைத்துக்கொண்டிருக்கிறது இந்த கேஜிஎப் 2 திரைபடம்.

கேஜிஎப் தயாரிப்பாளர் Hombale Films அடுத்து ‘இறுதி சுற்று’ , ‘சூரரை போற்று’ ஆகிய வெற்றிப்படங்களை இயக்கிய இயக்குனர் சுதா கொங்கரா உடன் கூட்டணி சேர்வதாக அதிகாரபூர்வமாக சமூக வலைத்தளங்களில் அறிவித்து இருக்கின்றனர். ‘சூரரை போற்று’ வின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து Hombale Films இயக்குனர் சுதா கொங்காராவுடன் கூட்டணி சேர்ந்து இருப்பதால் சினிமா ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது .

Hombale Films தயாரித்த கேஜிஎப் 1 ,கேஜிஎப் 2 ஆகிய இரண்டு படங்களின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து சுதா கொங்கரா இயக்க உள்ள படமும் Pan india படமாக தான் வெளியாகும் . இயக்குனர் சுதா கொங்கரா இயக்க உள்ள இந்த படம் உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட படம் என்றும் தயாரிப்பு நிறுவனமான Hombale Films தெரிவித்துள்ளனர்.

சுதா கொங்கரா இயக்க உள்ள இந்த படத்தில் யார் யார் நடிக்க உள்ளனர் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னமும் வெளியாகவில்லை இருப்பினும் சினிமாவட்டாரத்தில் சிலர் இந்த படத்தில் சூர்யா தான் ஹீரோவாக நடிக்கிறார் மற்றும் மேலும் ஜிவி பிரகாஷ் இந்தப் படத்திற்கு இசையமைக்க உள்ளார் என்று கூறிவருகின்றனர் . இதனால் நடிகர் சூர்யாவின் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 1266

    0

    0