நான் உயிருடன் தான் இருக்கிறேன், இறக்கவில்லை”! வீடியோ வெளியிட்ட பிரபல தொகுப்பாளர் அப்துல் ஹமீது!

Author:
25 June 2024, 10:52 am
Quick Share

90’sகளில் இவரில்லாமல் எந்த ஒரு மேடை நிகழ்வும் இருக்காது. 90s களின் ஃபேவரைட் தொகுப்பாளரான அப்துல் ஹமீது.நேற்று இறந்து விட்டதாக சமூக வலைத்தளங்கள் மற்றும் செய்திகளில் வெளியானது. இது ஒரு வதந்தி என தற்போது அப்துல் ஹமீத் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் பேசிய அவர் தெரிவித்ததாவது, என்னடா மாண்டவன் மீண்டும் மீண்டு வந்து பேசுகிறான் என நினைக்கிறீர்களா? ஆம் நான் நலமாக உள்ளேன். எனக்கு எந்த ஒரு விபரீதமும் நடைபெறவில்லை. நான் இறந்ததாக வந்த செய்திகள் அனைத்தும் உண்மை அல்ல. இந்த செய்தியை கேட்டு அனைவரும் என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டனர்.அப்போது என் குரலை கேட்டு சிலர் கதறி அழுதது எனக்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது. ஆனால் இத்தனை அன்பு உள்ளங்களை பெறுவதற்கு நான் என்ன தவம் செய்தேன் என்று தெரியவில்லை. மரணம் ஒரு வரம் அது எப்போது வேண்டுமானாலும் வரலாம். என் மீது வெறுப்பு கொண்ட சிலர், வளர்ச்சியை பார்த்து பொறாமைப்படும் சிலர், மத ரீதியாக எதிர்க்கும் சிலர்தான் இது போன்ற காரியங்களை செய்திருக்க வேண்டும்.

தமிழகம்,இலங்கை , கேரளா போன்ற அனைத்து பத்திரிகைகளிலும் நான் இறந்து விட்டதாக செய்தி வந்தது.தீர விசாரிக்காமல் இது போன்ற செய்திகளை பதிவிட வேண்டாம்.இது முதல் முறை அல்ல மூன்றாவது முறை நான் செத்து பிழைத்திருக்கிறேன். இதை நினைக்கும் போது நகைச்சுவையாக உள்ளது.இருந்தாலும் நாம் இறந்த பிறகு நம் மீது யார் அதிக அன்பு கொண்டுள்ளார் என்பதை அறிந்து கொள்ள நாம் உயிருடன் இருக்க மாட்டோம்.ஆனால் இதனை அதற்கு ஒரு சந்தர்ப்பமாக நான் எடுத்துக் கொள்கிறேன். எனக்காக பிராத்தனை செய்த அனைவருக்கும் நன்றி என்று தெரிவித்துள்ளார்.

Views: - 98

0

0

Leave a Reply