ஷூட்டிங்கில் மயக்கமே போட்டாலும் கண்டுக்க மாட்டேன்.. கருணையே இல்லாமல் பேசிய பா.ரஞ்சித்..!

Author: Vignesh
6 August 2024, 9:37 am

நட்சத்திரம் நகர்கிறது படத்தின் தோல்வியை அடுத்து பா ரஞ்சித் விக்ரமை ஹீரோவாக வைத்து தங்கலான் படத்தை இயக்கி முடித்திருக்கிறார். இத்திரைப்படம் ஆகஸ்ட் 15ஆம் தேதி ரிலீசாக உள்ளது. இந்த நிலையில், படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடைபெற்றது.

அதில் ரஞ்சித் பேசுகையில், விக்ரமுக்கு விலா எலும்பு முறிந்த பிறகும் ஒரு சண்டைக் காட்சி வைத்தேன். அதெல்லாம் அவரது முகத்தை பார்க்காமல் மானிட்டரில் மட்டும் பார்ப்பேன். ஷார்ட் முடிந்ததும் எனது உதவி இயக்குனர்களில் யாரையாவது அழைத்து அவருக்கு ஓகேயா என பாத்துட்டு வாங்கன்னு சொல்லுவேன். அவர்கள் சென்று பார்த்துவிட்டு சார் ஓகே என்று சொல்கிறார் என்பார்கள்.

ஆனால், அவருக்கு வலித்துக் கொண்டுதான் இருக்கும். நானே ஓகே சார் இன்னொரு ஒன் மோர் போகலாம் என்று கேட்பேன். அவ்வளவு கொடுமைப்படுத்தினேன் சாரி விக்ரம் சார் என்றும், பார்வதி பேசும் போது ஷூட்டிங் ஸ்பாட்டில் ரஞ்சித் யாருடன் பேச மாட்டார் என்று சொன்னார். அது உண்மைதான் ஏனெனில், இந்த படத்திற்காக அனைவரும் கடுமையாக உழைத்தார்கள்.

அந்த உழைப்புக்கு பதிலாக படத்தை நன்றாக எடுக்க வேண்டும் என்று நினைத்தேன். அதனால், யாரிடமும் பெரிதாக பேசவே இல்லை. யாராவது மயக்கம் போட்டு விழுந்தால், கூட அவர்களை கண்டுக்க மாட்டேன். அந்த அளவுக்கு கருணை இல்லாமல் இந்த படத்தின் ஷூட்டிங் நடந்து கொண்டேன். அதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று பா ரஞ்சித் பேசியிருந்தார்.

  • Karthi accident on Sardar 2 set படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!