பிக்பாஸ் வீட்டில் அவரை பார்த்ததுமே ஷாக்காயிட்டேன்..! இனிமே BB-யை பார்க்கமாட்டேன்.. விஷால் பட நடிகை ஓபன் டாக்..!
Author: Vignesh13 October 2022, 5:00 pm
இந்தியா முழுவதும் பிரபலமான ரியாலிட்டி ஷோவான பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய 5 மொழிகளில் நடத்தப்பட்டு வருகிறது.
இந்தியாவில் முதன்முதலில் இந்தி மொழியில் தான் பிக்பாஸ் நிகழ்ச்சி துவங்கப்பட்டது. இதனை சல்மான் கான் தொகுத்து வழங்கி வருகிறார். தற்போது 16 சீசன் நடைபெற்று வருகிறது.
திரைப்பட இயக்குனர் சஜித் கான் இந்த சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார். டெல்லி மகளிர் ஆணைய தலைவர் ஸ்வாதி மலிவால் இயக்குனர் சஜித் கான் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அவரை நிகழ்ச்சியில் இருந்து நீக்க வலியுறுத்தியும் மத்திய அமைச்சர் அனுராக் தாகூருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இயக்குனர் சஜித் கான் மீது Mee Too இயக்கத்தின்போது, பல்வேறு பெண்கள் பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்த நிலையில், டெல்லி பெண்கள் ஆணையம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள அவரை உடனடியாக வெளியேற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது.
இந்நிலையில், பிரபல இந்தி நடிகையும், மாடலுமான ஷெர்லின் சோப்ரா, பிக்பாஸ் தொடரில் இருந்து இயக்குநர் சஜித் கானை வெளியேற்றுமாறு அதிரடி குற்றச்சாட்டு ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
அதில் அவர்,”என் முன்னால், சஜித் கான் தனது அந்தரங்க பாகத்தை காட்டி, இதற்கு 0 – 10 வரை மதிப்பெண் போடச் சொல்லி சொன்னார் என ட்விட்டர் பதிவில் தெரிவித்திருந்தார்.
Mee Too இயக்கத்தித் சஜித் கான் மீது புகார் அளித்த 10 பெண்களில், ஷெர்லினும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனையடுத்து விஷாலின் தீராத விளையாட்டுப் பிள்ளை படத்தில் நடித்த நடிகை தனுஸ்ரீ தத்தா, சஜித் கானை பிக்பாஸ் நிகழ்ச்சியில் பார்ப்பது தனக்கும் அதிர்ச்சியாக இருந்ததாகவும், இதற்கு பிறகு, பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்க்க பிடிக்கவில்லை என்றும் தனுஸ்ரீ தத்தா கூறியுள்ளார்.
முன்னதாக நடிகர் நானே பட்டேகர் மற்றம் இயக்குநர் விவேக் அக்னி ஹோத்ரி ஆகியோர் மீது நடிகை தனுஸ்ரீ தத்தா, பாலியல் மீடு புகார்களை கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.