அந்த விஷயத்துல கெட்டிக்காரரா இருக்கனும்.. வருங்கால கணவர் குறித்து மனம் திறந்த தன்யா ரவிச்சந்திரன்..!

Author: Vignesh
15 September 2023, 4:15 pm

கருப்பன் படத்தின் ஹோம்லியாக நடித்த தன்யா, சமீபத்தில் இப்போது கிளியோபட்ரா போல் கவர்ச்சி போட்டோஷுட் புகைப்படங்களை வெளியிட்டு இளைஞர்களை டென்ஷன் ஆக்கி வருகிறார். அது கண்ணபின்னா என்று வைரல் ஆகியுள்ளது.

Tanya Ravichandran-updatenews360

கருப்பன் படத்தில் நடித்த நடிகை தன்யா, தமிழில், பலே வெள்ளையத்தேவா படத்தின் மூலம் தமிழ் திரைப்படத்தில் அறிமுகமானவர் நடிகை தன்யா. இவர் மறைந்த புகழ்பெற்ற நடிகர் ரவிச்சந்திரனின் பேத்தியும் கூட. இவர் அடுத்ததாக ‘பிருந்தாவனம், ‘கருப்பன் ஆகிய படங்களில் நடித்தார்.

Tanya Ravichandran-updatenews360

தற்போது இவர் பல படங்களில் நடித்தும் வருகிறார். இவர் நடித்த மூன்று படங்களிலும் குடும்பப் பெண்ணாகத்தான் நடித்து வந்தார். உடல் எடையை குறைத்து மாடர்ன் உடையில் லைட் ஆக சிரித்து போஸ் கொடுத்து இளைஞர்களை பித்து பிடிக்க வைப்பார்.

இந்நிலையில், பேட்டி ஒன்றில் பங்கேற்ற இவர் பிறந்தது திருச்சி என்றாலும், வளர்ந்தது என்னமோ சென்னை தான்.

நான் ரொம்பவே வெளியில் போய் ஊர் சுற்ற மாட்டேன். வீட்ல இருக்கிறது தான் எனக்கு பிடிக்கும். பிரண்டு வீட்டுக்கு போவேன். அவங்க என் வீட்டுக்கு வருவாங்க அவ்வளவுதான். அப்புறம் நான் ரொம்ப ஸ்ட்ரைட் ஃபார்வர்ட். அப்பாகிட்ட அட்வைஸ் கேட்பேன் எல்லாருடைய கருத்தையும் கேட்பேன். ஆனா முடிவு என்னோடு தான் இருக்கும். இப்ப பிபி 180 படத்துல நடிக்கிறேன். இது ஹீரோயின் ரோலுக்கு முக்கியத்துவம் கொடுக்கிற படம்.

Tanya Ravichandran-Updatenews360 (5)

இன்னொரு தமிழ் படத்துல நடிக்கவும் அக்ரிமெண்ட் சைன் பண்ணி இருக்கேன். ரெண்டு படங்களில் நடிக்க பேச்சுவார்த்தை போயிட்டு இருக்கு. காதல் யாருக்கு தான் பிடிக்காது. கல்யாணம் பண்ணிக்க போறவர் உண்மையா இருக்கணும் பொய் சொல்லக்கூடாது. பின்னாடி பேசுறது பிடிக்காது. நேருக்கு நேரா எதையும் பேசுற ஆளாக இருக்கணும். இந்த விஷயங்களில் கெட்டிக்காரரா இருக்கிறவர் தான் நான் கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படுகிறேன் என்று தன்யா ரவிச்சந்திரன் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்

  • dhanush paid 25 lakhs hospital bill for his director illness நிஜமாகவே கர்ணன்தான்!… தன்னை வைத்து இயக்கிய இயக்குனருக்கு மாபெரும் உதவி செய்த தனுஷ்…