டாஸ்மாக் கடை முன்பு இருந்த குடிமகன்களை அடித்து விரட்டும் விஷால்.. வைரலாகும் வீடியோ : கடைசியில் ட்விஸ்ட்!

Author: Udayachandran RadhaKrishnan
17 January 2024, 1:12 pm

டாஸ்மாக் கடை முன்பு இருந்த குடிமகன்களை அடித்து விரட்டும் விஷால்.. வைரலாகும் வீடியோ : கடைசியில் ட்விஸ்ட்!

சமூக வலைதளங்களில் விஷாலின் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.அதில் டாஸ்மாக் கடை முன்பு கூட்டம் அலை மோதுகிறது. அப்போது அங்கு வரும் நடிகர் விஷால், அங்கிருந்தவர்களை விரட்டி அடிக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

அதில் ஒரு இளைஞரை ஏற்கெனவே போதையில்தான் இருக்கே, இதில் இன்னும் போதை வேண்டுமா என கேட்டு அடிக்கிறார்.

இது என்னது என கேட்க அதற்கு அந்த இளைஞரோ டாஸ்மாக் கடை என சொல்ல, ஓங்கி அடித்து அட லூசு இது ரத்னம் படத்தின் செட்யா போயா போயா என எல்லாரையும் விரட்டும் விஷால் , டாஸ்மாக்குன்னு பேரு போட்டாலே எல்லாரும் வந்து நிற்கிறாங்க, போங்கயா என விரட்டும் காட்சிகள் வைரலாகி வருகிறது.

  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!