புதிய சிக்கலில் தனுஷ்.. பொறுப்புணர்வோடு செயல்படாத “வாத்தி” படக்குழு… ஆசிரியர்கள் கடும் கண்டனம்..!

Author: Vignesh
17 February 2023, 6:15 pm

நடிகர் தனுஷ் நடித்துள்ள வாத்தி திரைப்படம் தமிழகம் முழுவதும் வெளியான நிலையில், கட் அவுட்டிற்கு பால் ஊற்றியும், கைகளில் சூடம் ஏற்றியும் ரசிகர்கள் உற்சாகமுடன் திரைப்படத்தை கண்டு ரசித்தினர்.

இயக்குனர் வெங்கி அட்லூரியா இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்துள்ள வாத்தி திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியானது.

vaathi - updatenews360

பிரபல தயாரிப்பாளர் வம்சி தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்திற்கு, தனுஷ் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. அந்த வகையில் நெல்லை மாவட்டத்திலும் தனுஷ் ரசிகர்கள் வாத்தி திரைப்படத்தை பெரிதும் எதிர்பார்த்தனர்.

திட்டமிட்டபடி இன்று அதிகாலை முதல் காட்சி ரசிகர்களுக்கு திரையிடப்பட்டது. ரசிகர்கள் உற்சாகமுடன் வாத்தி திரைப்படத்தை பார்த்து மகிழ்ந்தனர். அந்த வகையில் நெல்லை சந்திப்பு ராம், முத்து ராம் திரையரங்கில் குவிந்த தனுஷ் ரசிகர்கள் திரையரங்க வளாகத்தில் தனுஷ் கட்டவுட் வைத்திருந்தனர்.

தொடர்ந்து அங்கிருந்த தனுஷ் கட்அவுட்டிற்கு ரசிகர்கள் பால் ஊற்றி உற்சாகம் அடைந்தனர். பின்னர் ரசிகர் ஒருவர் தனது கைகளில் சூடம் ஏற்றி, அதை தனுஷ் உருவத்திற்கு காண்பித்து தனது அன்பை வெளிப்படுத்தினார்.

தொடர்ந்து ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் வாத்தி திரைப்படத்தை ஆர்வமுடன் பார்த்து வருகின்றனர். இதனிடையே, வாத்தி படத்திற்க்கு எதிராக ஆசிரியர்கள் சங்கத்தை சேர்ந்தவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

‘வாத்தி’ என்கிற பெயரே ஆசிரியர்களை கேலி செய்யும் வகையில் இருப்பதாகவும், சமீப காலமாக காமெடியன்களை ஆசிரியராக நடிக்க வைத்து அவர்களை மோசமாக சித்தரிப்பது தொடர்ந்து நடைப்பெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

vaathi - updatenews360

ஆசிரியர்களை கேலி பொருளாக்கி வாத்தி என வைத்திருக்கும் இந்த படத்தின் பெயரை மாற்ற வேண்டும் என தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாநிலத் தலைவர் இளங்கோவன் தெரிவித்து உள்ளார்.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 592

    1

    0