சிறப்பு காட்சிக்கு END CARD…அல்லு அர்ஜுன் ஷாக்…பேரதிர்ச்சியில் சினிமா ரசிகர்கள்…!
Author: Selvan22 December 2024, 1:30 pm
புஷ்பா 2 ரிலீஸ்-ன் விளைவு-சிறப்பு காட்சிக்கு தடை விதித்த அரசு..!
புஷ்பா-2 ரிலீஸின் போது,சந்தியா தியேட்டரில் ஏற்பட்ட சோகமான சம்பவத்தால் தெலுங்கானா அரசு இனி சிறப்பு காட்சிக்கு அனுமதி கிடையாது என அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவான புஷ்பா-2 திரைப்படத்தை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருந்தனர்.அந்த தருணத்தில் படத்தின் சிறப்பு காட்சியில் அல்லு அர்ஜுன் கலந்துக்க சென்றார்.
அப்போது அவரை பார்க்க ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது.இதில் ஏற்பட்ட கூட்ட நெரிசலால் ஒரு பெண்மணி உயிரிழந்தார் மற்றும் அவரது மகன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதையும் படியுங்க: புஷ்பா 2 படக்குழுவுக்கு இடியாய் இறங்கிய செய்தி… வசூலை பதம் பார்த்த HD!
இந்த சம்பவத்தை எதிர்த்து பலரும்,அல்லு அர்ஜுன் மீது குற்றங்களை சாடி வந்தனர்.இந்த நிலையில் நேற்று தெலுங்கானா சட்ட சபையில் பேசிய அம்மாநில முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி,அல்லு அர்ஜுன் மீது குற்றங்கள் இருப்பதாக பேசினார்.
மேலும், நடிகர் அல்லு அர்ஜுனை சரமாரியாக தாக்கி பேசிய பின்பு,இனிமேல் எந்தவொரு படத்திற்கும் சிறப்பு காட்சிக்கான அனுமதி நான் முதலமைச்சராக இருக்கும் வரை அனுமதிக்க மாட்டேன் என அதிரடியாக உத்தரவிட்டார்.மேலும்,சினிமா டிக்கெட்கள் அதிக கட்டணத்துக்கு விற்கவும் தடை விதிக்க போவதாகவும் அறிவித்துள்ளார்.
இதன் காரணமாக இனி வருங்காலத்தில் தெலுங்கானாவில் வெளியாகும் பெரிய நட்சத்திர படங்கள் வசூல் செய்ய வாய்ப்பு இல்லை என தகவல் வெளியாகியுள்ளது.