சினிமா ரசிகர்கள் ஷாக்…16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் தியேட்டருக்கு NO…திடீர் உத்தரவை பிறப்பித்த நீதிமன்றம்..!

Author: Selvan
28 January 2025, 9:51 pm

அதிர்ச்சியில் திரையுலக ரசிகர்கள்

கடந்த வருடம் புஷ்பா-2 சிறப்பு காட்சியின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பெண்மணி ஒருவர் உயிரிழந்தார்.இந்த நிகழ்வு காட்டு தீ போல் பரவி ஒட்டுமொத்த திரையுலகத்தை அதிர்ச்சியாக்கியது.

மேலும் தெலுங்கானா அரசாங்கம் அல்லு அர்ஜுன் மீது கடுமையான நடவடிக்கைளை எடுத்துமட்டுமில்லாமல்,இனி சிறப்பு காட்சிகளுக்கு எப்போதும் அனுமதி இல்லை எனவும்,டிக்கெட்களை அதிக விலைக்கு விற்க கூடாது என பல விதிமுறைகளை அதிரடியாக பிறப்பித்தார் அம்மாநிலத்தின் முதலமைச்சர் ரேவந் ரெட்டி.

இந்த நிலையில் சமீபத்தில் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் வெளியான கேம் சேஞ்சர் படத்திற்கு சிறப்பு காட்சிகள் மற்றும் டிக்கெட் உயர்வு அனுமதிக்கப்பட்டதை எதிர்த்து தெலுங்கானா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.இந்த மனு மீதான விசாரணை முடிவை உயர் நீதிமன்ற நீதிபதி இன்று அதிரடியாக அறிவித்தார்.

இதையும் படியுங்க: குடும்பத்தோடு விபத்தில் சிக்கிய இமான் அண்ணாச்சி…உயிர் தப்பியது எப்படி…வெளிவந்த அதிர்ச்சி தகவல்..!

அதில் 16 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் காலை 11 மணிக்கு முன்னதாகவும்,இரவு 11 மணிக்கு மேலயும் திரையரங்கு சென்று படம் பார்க்க அனுமதிக்க கூடாது என தியேட்டர் நிர்வாகத்திற்கு தெலுங்கானா உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும் குழந்தைகள் அதிகாலை மற்றும் நள்ளிரவில் படம் பார்ப்பதால் மனதளவில் அவர்கள் பாதிக்க வாய்ப்பு உள்ளது என நீதிபதி விஜய் சென் ரெட்டி கருத்து தெரிவித்துள்ளார் அதுமட்டுமில்லாமல் கேம் சேஞ்சர் படத்தின் சிறப்பு காட்சிகளை அம்மாநில அரசு அனுமதி அளித்தததை கடுமையாக கண்டித்துள்ளது

  • fear was more when doing ajith project அஜித் சார் படம்,பயம்தான் அதிகமா இருந்தது- ஆதிக் ரவிச்சந்திரன் ஓபன் டாக்…