ரசிகர்கள் ஆனந்த கண்ணீர்… சிறைவாசத்தில் இருந்து தப்பினார் அல்லு அர்ஜூன்!

Author: Udayachandran RadhaKrishnan
13 December 2024, 7:45 pm

புஷ்பா 2 படத்தின் போது பெண் ரசிகை கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த சம்பவத்தில் நடிகர் அல்லு அர்ஜூனை போலீசார் கைது செய்தனர்.

சந்தியா தியேட்டருக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்காமல் அல்லு அர்ஜூன் வந்ததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டதால் அவரை கைது செய்ததாக போலீசார் விளக்கமளித்தனர்.

இந்த சம்பவத்திற்கு ஆந்திரா முழுவதும் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் உள்ள அவரது ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். முன்னாள் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி, தெலுங்கு சினிமா பிரபலங்கள் அவருக்கு ஆதரவாக பேசினர்.

இதையும் படியுங்க : என் மனைவிக்கு போன் செய்து பேசியதை லீக் செய்யட்டுமா? பிக் பாஸ் பிரபலங்கள் மோதல்!

மேலும் #WeStandWithAlluArjun என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி இந்திய அளவில் ரசிகர்கள் டிரெண்ட் செய்தனர். இந்த நிலையில் அல்லு அர்ஜூனுக்கு 14 நாள் சிறை வாசம் விதிக்கப்பட்டது.

Allu Arjun Kiss for his wife

இதையடுத்து அவருக்கு இடைக்கால ஜாமீனும் நீதிமன்றம் வழங்கியது. நடிகர் என்ற காரணத்தால் இந்த அசம்பாவிதத்திற்கு இவர் பொறுப்பாளரா? என நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.

  • Ajith Vidamuyarchi Trailer Release Update விடாமுயற்சி ட்ரைலர் ரெடி : அப்போ ரிலீஸ் தேதி…இருங்க பாய்..நாளைக்கு ஒரு வெயிட்டான சம்பவம் இருக்கு..!