அல்லு அர்ஜுன் 20 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் …அமைச்சரின் பேட்டியால் பரபரப்பில் தெலுங்கானா..!

Author: Selvan
24 December 2024, 9:07 pm

தெலுங்கானா அமைச்சரின் அதிரடி பேச்சு

புஷ்பா 2 பிரச்சனை பூகம்பமாய் வெடித்திருக்கும் நிலையில் அல்லு அர்ஜுன் மீது பல அரசியல் பிரமுகர்கள் தங்களுடைய எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் தெலுங்கானா அமைச்சர் கோமதி ரெட்டி வெங்கட் ரெட்டி இறந்த பெண்ணின் குடும்பத்திற்கு அல்லு அர்ஜுன் 20 கோடி நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.

Telangana political leaders on Allu Arjun

காவல்துறை எதிர்ப்பை மீறி,அல்லு அர்ஜுன் சிறப்பு காட்சிக்கு சென்றுள்ளார்,அவர் சென்றதனால் தான் கூட்ட நெரிசலில் சிக்கி பெண்மணி உயிரிழந்துள்ளார் என்று கூறி, மேலும் பட வசூல் 1000 கோடி,2000 கோடி என படக்குழு தெரிவித்து வரும் நிலையில் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு 20 கோடி கொடுப்பதில் தப்பில்லை என தெரிவித்துள்ளார்.ஏன் அவர்களால் இந்த தொகை கொடுக்க முடியாது என கேள்வியும் எழுப்பியுள்ளார்.

இதையும் படியுங்க: அல்லு அர்ஜூனால் சினிமாவை விட்டு விலகும் புஷ்பா பட இயக்குநர்.. திடீர் அறிவிப்பு!

தற்போது அல்லு அர்ஜுன் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.மேலும் இறந்த பெண்மணி குடும்பத்திற்கு புஷ்பா 2 தயாரிப்பாளர் நவீன் யோனெனி 50 லட்சம் காசோலையை நேற்று வழங்கியுள்ளார்.தற்போது அமைச்சரின் இந்த பேச்சால் அல்லு அர்ஜுனுக்கு மேலும் தலைவலி ஏற்பட்டுள்ளது.

  • Famous Actress Bought New Rolls Royce Car இந்தியாவில் முதன்முறையாக விலை உயர்ந்த காரை வாங்கிய நடிகை.. விலையை கேட்டா தலையே சுத்திடும்!