‘புஷ்பா’ ஒரு படமா…மாணவர்களின் நிலைமை கேள்விக்குறி…கொதித்தெழுந்த பள்ளி ஆசிரியர்.!
Author: Selvan24 February 2025, 9:17 pm
மாணவர்களை கெடுக்கும் சினிமா
தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளிவந்த புஷ்பா திரைப்படம் மாணவர்களின் மனநிலையை கெடுத்து வைக்கிறது என்று பள்ளி தலைமை ஆசிரியர் வேதனையோடு தெரிவித்துள்ளார்.
இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் புஷ்பா தி ரூல்,ஏற்கனவே இப்படத்தின் முதல் பாகம் வெளியாகி வசூலை குவித்த நிலையில் கடந்த வருடம் இதனுடைய இரண்டாம் பாகம் வெளியாகி வசூலை குவித்து பல சாதனை புரிந்தது,படம் ரிலீஸ் ஆகி திரையில் வந்தவுடன் பல வித சிக்கல்களை சந்தித்தது,இப்படத்திற்கு தணிக்கை குழு U/A சான்றிதழை கொடுத்தது.
இதையும் படியுங்க: அரசியல் வசனங்களுடன் ஜனநாயகன்.. வெளியான மாஸ் அப்டேட்!
இந்த நிலையில் மாணவர்களின் நடத்தை குறித்து தெலுங்கானா அரசு பள்ளி ஆசிரியர்கள் அம்மாநில கல்வி ஆணையத்துடன் கலந்துரையாடல் நடத்தினார்கள்,அதில் ஐராபாத்தின் யூசப்குடாவை சேர்ந்த பள்ளி தலைமை ஆசிரியர் ஒருவர்,மாணவர்கள் தற்போது வரக்கூடிய சினிமாக்களை பார்த்து தங்களுடைய முடியை ரொம்ப கேவலமாக கட் செய்து வருகின்றனர்,மேலும் வகுப்பறையில் அவர்களிடம் ஆபாச பேச்சுகளும் அதிகமாக உள்ளது.
சமீபத்தில் வெளிவந்த அல்லு அர்ஜுனின் புஷ்பா படம் மாதிரி ஏகப்பட்ட சினிமாக்களை பார்த்து தப்பான பாதையால் செல்கின்றனர்,மாணவர்களை கண்டித்தால் தற்கொலை செய்து விடுவார்களோ என்ற பயமும் எங்களுக்கு உள்ளது என மிக வேதனையோடு அந்த கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.
#Pushpa is badly influencing students, says a government school teacher. #AlluArjun #RashmikaMandanna #Sukumar #Pushpa2 #Pushpa2therule #PushpaTheRule pic.twitter.com/4h6XOWONy8
— BuzZ Basket (@theBuzZBasket) February 24, 2025
ஆசியரின் இந்த பேச்சுக்கு பலரும் தற்போது ஆதரவு தெரிவித்து தங்களுடைய கருத்துக்களை கூறி வருகின்றனர்