பண்ணைவீட்டுக்கு யாரை கூட்டிப்போனா உனக்கு என்ன?.. – வடிவேலு பார்ட்னரிடம் பஞ்சரான பயில்வான்..!
Author: Vignesh1 June 2023, 11:00 am
தமிழ் சினிமாவில் யாரும் எட்டக்கூடமுடியாத வகையில் மிகப்பெரிய காமெடி நடிகராக வலம் வந்தவர் வைகைப்புயல் வடிவேலு. தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நகைச்சுவை நடிகரான இவர் எப்படிபட்ட காமெடியாக இருந்தாலும் தனது பாடி லேங்குவேஜ் மூலம் நிலைநிறுத்திடுவார்.
ஒவ்வொரு தலைமுறைக்கும் ஒவ்வொரு நகைச்சுவை நடிகர்கள் மாறுவது வழக்கம். ஆனால் வடிவேலுவுக்குப் பின் அடுத்தாக இவர் என சொல்ல முடியாத அளவுக்கு அவர் இருந்து வருகிறார். நடிகர் ராஜ்கிரண் தான் வடிவேலுவை தமிழ் சினிமாவில் அறிமுகம் செய்துவைத்தார். `என் தங்கை கல்யாணி’ படம் மூலம் சிறிய பாத்திரத்தில் தன் பயணத்தைத் துவங்கிய வடிவேலு தொடர்ந்து என் ராசாவின் மனசிலே, சின்ன கவுண்டர், சிங்கார வேலன், தேவர் மகன், காதலன், காதலர் தேசம் என தொன்னூறுகளின் இறுதியில் கவனிக்கப்படும் முகமாக மாறினார்.
அதன் பின்னர் , ரஜினி ,கமல் , அஜித், விஜய், பிரசாந்த் என பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்திருக்கிறார். இதனிடையே சமீப நாட்களாக நடிகர் வடிவேலு குறித்து அடுக்கடுக்கான புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. பணத்திமிரு, நான் தான் என்ற தலைக்கனம் உள்ளிட்டவை வடிவேலுவின் வாழ்க்கையை இன்னும் அழித்துக்கொண்டு தான் இருக்கிறது.
முன்னதாக, மார்க்கெட் இழந்த நடிகைகளுக்கு தன் படத்தில் கண்டீஷன் போட்டுத்தான் வடிவேலு நடிக்க வைப்பாராம். அதிலும் வாய்ப்பு தேடி வரும் நடிகைகளுக்கு உதவி செய்யும் போது சில அட்ஜெஸ்ட்மெண்ட்களையும் நடிகைகளிடம் வடிவேலு எதிர்ப்பார்ப்பார் என்று பயில்வான் ரங்கநாதன் தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில், சமீபத்தில், வைகைபுயல் வடிவேலு நடிகைகளை பண்ணைவீட்டுக்கு அழைத்து செல்கிறார் என்று பயில்வான் சர்ச்சையாக பேசியது வைரலானது குறித்து பிரபல காமெடி நடிகர் டெலிபோன் ராஜ் ஒரு பேட்டியொன்றில், பயில்வான் ரங்கநாதனை கிழித்து தொங்கவிட்டுள்ளார்.
அதில், அவரால் நிற்கக்கூட முடியாது என்றும் கண்களில் இருந்து நீராக கொட்டும் என்றும், மேலும் ஒரு வசனம் கொடுத்தால் அதை பயில்வானால் சொல்ல முடியாது என்றும், ஞாபக மறதியும் இருப்பதாகவும் தனது குடும்பத்தை பார்க்க வேண்டும் என்பதால் மட்டுமே யூடியூபில் பேசி வருகிறார்.
மேலும், யூடியூபில் பயில்வான் பேச 500, 1000 என்ன 2000 வரை கொடுப்பதை வைத்து தான் குடும்பத்தை நடத்துகிறார். யாரோ ஒரு நடிகர் பண்ணைவீட்டுக்கு யாரையோ பண்ணை வீட்டிற்கு அழைத்து செல்கிறார் என்று பயில்வான் கூறுகிறார். அந்த பெண்ணை அழைத்து செல்ல அந்த நடிகரால் முடிகிறது, இவரால் முடியவில்லை, அவருக்கு என்ன வந்தது என்று டெலிபோன் ராஜ் பேசியுள்ளார்.