டிக் டாக் சூர்யா தேவி VS விஜய் டிவி நாஞ்சில் விஜயன்.. அதிரடி கைது – பின்னணி என்ன?..
Author: Vignesh17 December 2022, 8:45 pm
சென்னை: விஜய் டிவி பிரபலம் மற்றும் சின்னத்திரை நடிகர் நாஞ்சில் விஜயனை போலீசார் கைது செய்தனர்.
சின்னத்திரை நடிகர் நாஞ்சில் விஜயன் மீது சூர்யாதேவி என்ற யூடியூபர் ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில், நாஞ்சில் விஜயன் மீது 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த வழக்கு தொடர்பாக நாஞ்சில் விஜயனுக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு பல்வேறு சம்மன்கள் அனுப்பப்பட்ட நிலையிலும், விசாரணைக்கு ஆஜராகவில்லை என தெரியவருகிறது.
இந்த நிலையில் சென்னையில் இன்று நடிகர் நாஞ்சில் விஜயனை போலீசார் கைது செய்தனர். தற்போது வளசரவாக்கம் காவல் நிலையத்தில் வைத்து போலீசார் நாஞ்சில் விஜயனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுதொடர்பாக அவரை நீதிமன்ற காவலுக்கு அனுப்பவும் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.