துணை நடிகையுடன் கசமுசா…பாலியல் வழக்கில் சிக்கிய புஷ்பா பட நடிகர்…

Author: Selvan
27 November 2024, 7:33 pm

துணை நடிகையுடன் உறவு

இன்னும் ஓரிரு நாட்களில் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகி இருக்கும் புஷ்பா 2 திரைப்படம் வெளியாக உள்ள நிலையில்,அப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த பிரபல நடிகர் பாலியல் குற்றத்திற்காக கைதுசெய்துள்ளனர்.

புஷ்பா படத்தின் நடிகர்களில் ஒருவர் ஸ்ரீதேஜ்,பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி உள்ளார். அவருக்கு எதிராக பாலியல் புகார்கள் மற்றும் மோசடி குற்றச்சாட்டுகள் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.

துணை நடிகையின் புகார்

தெலுங்கு திரைப்படங்களில் வில்லன் மற்றும் துணை நடிகராக பிரபலமாக இருக்கும் ஸ்ரீதேஜ்.37 வயதான இவர், துணை நடிகை ஒருவரை திருமணம் செய்வதாக வாக்குறுதி அளித்து, அவரிடம் நகைகள் மற்றும் பணத்தை பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.

அந்த நடிகையுடன் கடந்த ஒரு ஆண்டாக கணவன்-மனைவி போல வாழ்ந்தார் என புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், கடந்த ஏப்ரல் மாதம் முதல் அவருடன் தொடர்பு கொள்ளாமல் தவிர்த்து வந்துள்ளார், இதனால் பாதிக்கப்பட்ட நடிகை ஹைதராபாத்தின் குக்கட்பள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு

அந்த புகாரின் அடிப்படையில், இந்திய தண்டனை சட்டத்தின் 69, 115(2), மற்றும் 318(2) பிரிவுகளின் கீழ் ஸ்ரீதேஜ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது முதல் முறை அல்ல,ஏற்கனவே ஸ்ரீதேஜ் மீது திருமணமான பெண்ணுடன் கள்ள உறவு வைத்ததாக பாலியல் புகார் ஒன்று பதிவு செய்யப்பட்டது. மேலும், அந்த பெண்ணின் கணவர் மாரடைப்பால் உயிரிழந்தார் என கூறப்படுகிறது.

நடிப்பு வாழ்க்கை கேள்வி குறி

ஸ்ரீதேஜ் தெலுங்கு சினிமாவில் முக்கியமான சில படங்களில் நடித்துள்ளார். என்டிஆர்: கதாநாயகடு, என்டிஆர்: மகாநாயகடு, மற்றும் லட்சுமி என்டிஆர் போன்ற வாழ்க்கை வரலாற்றுப் படங்களில் முக்கிய வேடங்களில் நடித்தார்.

இதையும் படியுங்க: திருமண புகைப்படத்தை வெளியிட்ட சித்தார்த்..WOW… கண்ணை கொள்ளை கொள்ளும் பேரழகு…!

அதேபோல், புஷ்பா படத்தில் மொல்லட்டி தர்மா தேஜ் என்ற கதாபாத்திரத்தில் நடித்து புகழ் பெற்றார். அடுத்த மாதம் வெளிவரவுள்ள புஷ்பா 2 படத்திலும் அவர் நடித்துள்ளார்.

இந்த குற்றச்சாட்டுகள் அவரது நடிகர் வாழ்க்கையை பெரிதும் பாதிக்கக்கூடிய நிலையில் உள்ளன. குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணை தீவிரமாக நடைபெற்று வருவதால், அவரது எதிர்காலம் எப்படி இருக்கும் என பல கேள்விகளை எழுப்பிவருகிறது.

  • pavni reddy condition on amir for marriage மதம் மாறச் சொன்ன அமீர்? பாவனி போட்ட ஒரே ஒரு கண்டிஷன்! இப்படி எல்லாம் நடந்திருக்கா?