விஜயின் வாரிசுக்கு குறைவான திரையரங்குகளே ஒதுக்கப்பட்டிப்பதாக செய்திகள் வெளியான நிலையில், அது குறித்து பிரபல தயாரிப்பாளர் தனது காரசாரமான கருத்தை முன்வைத்திருக்கிறார்.
நடிகர் விஜயின் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘வாரிசு’ திரைப்படமும், அஜித் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘துணிவு’ திரைப்படமும் பொங்கலுக்கு வெளியாக இருக்கிறது. மிக நீண்ட நாட்களுக்கு பிறகு விஜய், அஜித் படங்கள் ஒரே நாளில் மோத இருப்பதால், இரு தரப்பு ரசிகர்களும் அதிக எதிர்பார்ப்போடு காத்திருக்கின்றனர்.
இதில் துணிவு படத்தை வெளியிடும் உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனமும், வாரிசு படத்தின் வெளியிடும் உரிமையை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனமும் கைப்பற்றி இருக்கிறது. இந்த நிலையில் தற்போது தமிழ் சினிமாவில், அதிக செல்வாக்கு உள்ள உதயநிதி, துணிவு படத்திற்கு அதிக அளவு திரையரங்குகளை கைப்பற்றி விட்டதாக தகவல் வெளியானது.
இதனை உதயநிதி ஸ்டாலின் மறுத்திருந்த போதும், அது குறித்தான சர்ச்சை இன்னும் ஓய்ந்த பாடில்லை. இதற்கிடையே வாரிசு படத்திற்கு தெலுங்கில் முன்னுரிமை கொடுக்கமுடியாது என்று தெலுங்கு தயாரிப்பாளர் சங்கம் அறிக்கை வெளியிட்டு இருந்ததும் தமிழ் சினிமாவில் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிலையில் இது குறித்த தனது கார சாரமான கருத்தை பிரபல தயாரிப்பாளர் ராஜன் முன்வைத்துள்ளார்.
இது குறித்து அவர் பேசும் போது, “ அது தவறான கணக்கு. விஜய்க்கு 300 திரையரங்குகள்.. அஜித்திற்கு 800 திரையரங்குகள் என்றெல்லாம் கொடுக்கமாட்டார்கள். அது மனசாட்சிக்கு விரோதமானது. திரையரங்குகள் இருவருக்கும் சமமாக பிரித்துக்கொடுக்கப்படும்.
தெலுங்கு திரையுலகம் அங்குள்ள சினிமாவை காப்பாற்ற முயற்சிக்கிறது. விஜய் படம் இங்கும் ரிலீஸ் ஆகிறது, அங்கும் ரிலீஸ் ஆகிறது. ஆனால் பாலகிருஷ்ணா படம் இங்கு ரிலீஸ் ஆகிறதா? அதனால், அங்கு தயாரிப்பாளர்களின் முதலீட்டை காப்பாற்றுவதற்தாக, முயற்சிகள் நடக்கிறது. வாரிசு படத்தின் தயாரிப்பு, இயக்கம் என இரண்டுமே தெலுங்கை சேர்ந்தவர்கள்தான்.
அங்கு தெலுங்கு நடிகர்கள் நல்ல ஒத்துழைப்பை கொடுக்கிறார்கள். அப்படி இருக்கும் போது அவர்களை வைத்து படம் எடுப்பதை விட்டு விட்டு, தமிழ் ஹீரோவுக்கு 25 கோடி அதிகமாக கொடுத்து படம் எடுக்கிறார் வாரிசு படத்தின் தயாரிப்பாளர். இதனால் தமிழ் சினிமாவின் மார்க்கெட் கெடுகிறது. இனி விஜய் தற்போது வாங்கும் சம்பளத்தை குறைப்பாரா?
அஜித் விஜய் ஆகிய இரண்டு பேரின் படங்களும் நன்றாக ஓட வேண்டும். ஆனால் அவர்களால் தெலுங்கு மார்க்கெட் குறைவதற்கு தெலுங்கு சினிமாவை சேர்ந்தவர்கள் விரும்ப வில்லை. ஆனால் வாரிசு அங்கு நிச்சயமாக வெளியாகும். ஆனால் 35 சதவீதம் அளவிலேயே திரையரங்குகள் கொடுக்கப்படும். அங்கு விஜய்க்கு மரியாதை அவ்வளவுதான்.” என்று பேசினார்.
வக்ஃபு சட்ட திருத்த மசோதா மக்களவை மற்றும் மாநிலங்கலவையில் நிறைவேற்றப்பட்டதை கண்டித்து வேலூர் மேற்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகம்…
சச்சின் ரீரிலீஸ்… விஜய் நடிப்பில் 2005 ஆம் ஆண்டு வெளியான “சச்சின்” திரைப்படம் 90ஸ் கிட்ஸின் மிகவும் விருப்பத்திற்குரிய திரைப்படமாக…
2025ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் சென்னை அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. குறிப்பாக முதல் போட்டியில் மும்பை அணியுடன்…
அபார முயற்சி, ஆனால்? ரஜினிகாந்தை நாம் திரையில் பல கதாபாத்திரங்களில் ரசித்து பார்த்திருப்போம். ஆனால் அனிமேஷனில் ரஜினிகாந்தை கொண்டு வந்த…
வக்பு வாரிய சட்டத்தருத்த மசோதா கடும் எதிர்ப்புக்கு மத்தியில் மக்களவையில் ஒரு நிறைவேற்றப்பட்டது. இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும்…
ரொமான்டிக் ஹீரோ டூ ஆக்சன் ஹீரோ சூர்யா தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானதில் இருந்து காதலை மையமாக வைத்து உருவான…
This website uses cookies.