கோலிவுட்டில் முன்னனி நடிகையாக வலம் வரக்கூடிய நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் வித்தியாசமான கதாபாத்திரங்கள், கதைகளை தேர்ந்தெடுத்து தனது தொடர்ச்சியான வெற்றி மூலம் ரசிகர்களைக் கவர்ந்து வருகிறார்.
இதனிடையே, தென்னிந்திய சினிமா துறையில் ஹீரோயினாக அறிமுகமாகி தற்போது நெகட்டிவ் ரோலில் நடித்து அசத்தி வரும் வரலட்சுமி சரத்குமார். இவர் முன்னதாக போடா போடி திரைப்படத்தில் STR-க்கு ஜோடியாக நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் அறிமுகமானார்.
இதன் பிறகு விஷால் உடன் காதல் இருந்ததாக தகவல் வெளியாகி அதுவும் முடிவுக்கு வந்தது. பின்னர் வெளியான ஒரு சில படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த இவர் ஒரு கட்டத்திற்கு மேல் நெகட்டிவ் கேரக்டரை ஏற்று நடித்து ரசிகர்களின் கவனத்தை பெற்று வருகிறார்.
கடந்த சில மாதங்களாகவே தமிழில் அவருக்கு திரைப்பட வாய்ப்புகள் கிடைக்காததால் தெலுங்கு சினிமா பக்கம் கவனம் செலுத்த அங்கு வாய்ப்புகள் தொடர்ந்து கிடைத்த வண்ணம் உள்ளது. இதனால் அவர் ஹைதராபாத்திலே செட்டில் ஆகிவிட்டார். எனவே சமீபத்திய பேட்டி இது குறித்து வெளிப்படையாக பேசிய வரலக்ஷ்மி தனக்கு தமிழை காட்டிலும் தெலுங்கில் தான் அதிகம் மார்க்கெட் இருக்கிறது என கூறி இருக்கிறார்.
இதை கேட்டு கடுப்பான கோலிவுட் திரை ரசிகர்கள், உங்க அப்பாவுக்கு வாழ்க்கை கொடுத்ததே நம்ம ஊர் மக்கள் தான். அவர் சம்பாதித்த பணத்தில் தான் நீங்க இப்போ இந்த அளவுக்கு வளர்ந்திருக்கீங்க? எனவே எப்படிப்பட்ட நிலையிலும் வளர்ந்து வந்த பாதையை மறந்துடாதீங்க என அறிவுரை கூறி விமர்சித்துள்ளனர்.
ராஷ்மிகா மந்தனா கன்னடத்தைப் புறக்கணிப்பதாக அம்மாநில காங்கிரஸ் எம்எல்ஏ குற்றம் சாட்டியுள்ள நிலையில், இவ்விவகாரம் பூதாகரமாகியுள்ளது. பெங்களூரு: இது தொடர்பாக…
நடிகர் விஜய் முதலில் பத்திரிகையாளர்களைச் சந்திக்கட்டும், அதற்கு பிறகு நீங்கள் அவரிடம் கேள்வி கேளுங்கள் என நடிகர் விஷால் கூறியுள்ளார்.…
'சர்தார் 2' படப்பிடிப்பு நிறுத்தம் பொன்னியின் செல்வன் 2 படத்திற்கு பிறகு,நடிகர் கார்த்தி தொடர்ந்து பல புதிய திரைப்படங்களில் பணியாற்றி…
மொஹ்சின் கானின் சர்ச்சை கருத்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் மொஹ்சின் கான்,இந்திய அணியின் முன்னணி வீரர் விராட் கோலியை…
அரையிறுதியில் வருண் ஆடுவாரா சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் தற்போது இந்திய அணி அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ள நிலையில் நாளை துபாயில் ஆஸ்திரேலியாவை…
சினிமாவில் அட்ஜெஸ்ட்மென்ட் புகார் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கேரளா சினிமா உலகில் ஹேமா கமிட்டி கொடுத்த அறிக்கை…
This website uses cookies.