பேரதிர்ச்சி.!தெலுங்கு நடிகர்கள் மீது புகார்..பரபரப்பில் திரையுலகம்.!
Author: Selvan20 March 2025, 4:57 pm
சூதாட்ட செயலிகளில் சிக்கிய நடிகர்கள்
தெலுங்கு திரைப்பட நடிகர்கள் ராணா டகுபதி,விஜய் தேவரகொண்டா,பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட 25 பேர் மீது சைபராபாத் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.சூதாட்ட செயலிகளை விதிகளை மீறி விளம்பரப்படுத்தியதாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தெலங்கானா மாநிலம் மியாப்பூரைச் சேர்ந்த தொழிலதிபர் பனீந்திரா ஷர்மா என்பவர் ஹைதராபாத் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.சமூக வலைதளங்களில் சினிமா பிரபலங்கள் மற்றும் இன்ஃப்ளுயன்சர்கள் சூதாட்ட செயலிகளை விளம்பரப்படுத்தியதை அடுத்து,பல இளைஞர்கள் அந்த செயலிகளில் பணம் முதலீடு செய்து பெரியளவில் இழந்துள்ளனர்.தானும் இந்த செயலிகளால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும்,இந்த விளம்பரங்களை நம்பி பலரும் நஷ்டமடைந்துள்ளதாகவும் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படியுங்க: நாளை ஓடிடியில் குதிக்கும் படங்கள்…எந்த படத்துக்கு நீங்க வெயிட்டிங்.!
மேலும்,பணத்தேவையால் மக்கள் சூதாட்ட செயலிகளில் முதலீடு செய்யும் சூழல் உருவாகியுள்ளதோடு,இந்த செயலிகளை விளம்பரப்படுத்திய பிரபலங்கள் பெரிய தொகை பெற்றுள்ளனர் என அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த புகாரின் அடிப்படையில் ராணா டகுபதி,விஜய் தேவரகொண்டா,பிரகாஷ் ராஜ்,நிதி அகர்வால் உள்ளிட்ட திரையுலக பிரபலங்களும்,சமூக வலைதள இன்ஃப்ளுயன்சர்களும் சேர்ந்து மொத்தம் 25 பேருக்கு எதிராக ஹைதராபாத் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இந்த விவகாரம் தெலுங்கு திரையுலகில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
