தென்னிந்திய சினிமாவின் பிரபல நட்சத்திர நடிகையாக இருந்து வரும் நடிகை சிம்ரன் தற்போது இரண்டாவது இன்னிங்ஸில் அடுத்த அடுத்த திரைப்படங்களில் நடித்து பட்டய கிளப்பி வருகிறார். இந்த நிலையில் தெலுங்கு சினிமாவில் நடிகை சிம்ரனுக்கு நடிக்க தடை வித்துள்ளனராம். இந்த விஷயம் தெலுங்கு சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளனர்.
அதாவது தெலுங்கில் ஒரு படத்தில் நடிக்க கமிட்டான நடிகை சிம்ரன் தயாரிப்பாளிடம் அதற்கான அட்வான்ஸ் ஆக பெரிய தொகையை வாங்கிவிட்டு அவருக்கு டேட் கொடுக்காமல் இன்று நாளை எனஇழுத்து அடித்து வந்திருக்கிறார். அது மட்டுமில்லாமல் வேறு ஒரு முன்னணி நடிகரின் பட வாய்ப்பு வந்தவுடனே அந்தப் படத்தில் நடிக்க கமிட் ஆகிவிட்டாராம் நடிகை சிம்ரன் .
இதனால் ஆத்திரம் அடைந்த அந்த தயாரிப்பாளர் தயாரிப்பாளர் சங்கத்திடம் புகார் கொடுத்திருக்கிறார். அதன் அடிப்படையில் நடிகை சிம்ரன் மீது ஆக்சன் எடுத்த தயாரிப்பு சங்கம் அவருக்கு ரெட் கார்ட் கொடுத்து வேறு எந்த ஒரு தெலுங்கு திரைப்படத்திலும் இனி நீங்கள் நடிக்க முடியாது எனக்கூறி உத்தரவிட்டுள்ளது.
இதனால் அதிர்ச்சி அடைந்து போன சிம்ரன் உடனடியாக தன்னுடைய கையில் வைத்திருந்த ரூபாய் 5 லட்சம் பணத்தை அபராதம் ஆக கட்டி விட்டு உடனடியாக மீண்டும் தெலுங்கு சினிமா படங்களில் நடிக்க அனுமதி வாங்கி இருக்கிறார். இந்த விவகாரத்தை பிரபல தயாரிப்பாளர் கே. ராஜன் சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறி பரபரப்பு கிளப்பி இருக்கிறார்.