“ஈ” ஆக மாறி BLUE சட்டையை பழி வாங்குங்க நானி – கடுப்பில் உச்சத்தில் தெலுங்கு FANS?
Author: Shree31 March 2023, 7:29 pm
தெலுங்கு சினிமாவின் நட்சத்திர நடிகரான நானி இயக்குனர் ஸ்ரீகாந்த் இயக்கத்தில் எனும் படத்தில் நடித்துள்ளார். கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடித்திருப்பதால் இப்படத்தினை தமிழ் ரசிகர்களும் பெரிதும் எதிர்பார்த்திருந்தனர். நேற்று வெளியான இப்படம் கலவையான விமர்சனத்தை பெற்று வசூலில் பின் தங்கியது.
சந்தோஷ் நாராயணன் இசையமைத்த இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் பாண் இந்தியா படமாக உருவாகி வெளியானது. நிலக்கரி தொழிலாளராக நானி நடித்திருந்த இப்படதிற்கு ப்ளூ சட்டை மாறன் கொடுத்துள்ள விமர்சனம் தெலுங்கு ரசிகர்களை கடுங்கோபமடைய செய்துள்ளது.
படத்தின் கதையை நிலக்கரியில் ஆரம்பித்து, அப்புறம் ஒயின்ஷாப்புக்கு போயி, அப்புறம் லோக்கல் எலக்ஷனுக்கு போயி, அங்கிருந்து ட்ரையங்கள் லவ் போயி, கடைசியாக வில்லனுக்கு ஒரு கண்ணு அப்படிங்குற ஒரு கதையை சொல்லி எங்க ஆரம்பிச்சோம் எப்படி முடிக்கணும்னு தெரியாமல் திக்குமுக்காடி பார்குற நம்மள திணறவச்சிட்டாங்க. என ஒட்டுஓட்டுன்னு ஒட்டித்தள்ளிவிட்டார். இது நானி ரசிகர்களை கோபத்திற்கு உள்ளாக்கியுள்ளது. சில நெட்டிசன்ஸ், நானி சார், வாங்க ஈ ஆக மாறி இந்த BLUE மாறனை பழிவாங்குங்க இப்படித்தான் பல பேர் வாழ்க்கையில மண் அள்ளி போட்டுட்டு இருக்காரு இவரு என கமெண்ட்ஸ் செய்துள்ளனர்.