நடுரோட்டில் இளைஞருடன் அடிதடி…பிரபல நடிகரின் மனைவி ரத்த காயங்களுடன் போலீசில் பரபரப்பு புகார்!

Author: Shree
12 May 2023, 8:37 pm

90களில் தமிழ் சினிமாவில் பல காமெடி நடிகராக இருந்தும், வடிவேலுடன் இணைந்து பல திரைப்படங்களில் நடிகர் தாடி பாலாஜி கலக்கியவர். நடிகர் தாடி பாலாஜியின் யதார்த்தமான நடிப்பால் இவருக்கென பல ரசிகர்களை தன்வசப்படுத்தி வைத்திருக்கிறார். இவரின் காதல் மனைவி நித்யாவும் பாலாஜிக்கும் உள்ள சண்டை உலகறிந்த செய்தியாக மாறிவிட்டது.

இந்த நிலையிலும் இவர்களுக்கு போஷிகா என்ற பெண்குழந்தை உள்ளது. மேலும் இவர்கள் இருவரும் அடிக்கடி சண்டையிட்டுக் கொள்வார்கள் என பிரபல தொலைக்காட்சியால் ஏற்பாடுச் செய்யப்பட்டிருந்த நடன நிகழ்ச்சியின் மூலம் தான் வெளிச்சத்துக்கு வந்தது. இதனை தொடர்ந்து நித்யாவும் பாலாஜிக்கும் இடையேயான சண்டைகள் எல்லைமீறிய நிலையில் கோர்ட், போலிஸ் என மிகவும் வைரலான நிலையில் இருவரும் சமீபகாலமாக பிரிந்து தான் வாழ்ந்து வருகிறார்கள்.

நித்யா மகள் போஷிகாவுடன் தனியாக வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் நித்யாவிடம் கலைச்செல்வன். என்ற 29 வயது இளைஞன் ரூ. 94,000 கடனாக வாங்கி இருக்கிறார். அதில் 52 ஆயிரம் ரூபாய் மட்டும் கலைச்செல்வன் திருப்பிக் கொடுத்திருக்கிறார். மீதி தொகையை நித்யா திருப்பி கேட்டதற்கு கொடுக்காமல் இழுத்தடித்து வந்துள்ளார்.

இதனால் கோபத்தின் உச்சத்திற்கு சென்ற நித்யா அவரது வீட்டிற்கு சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அதன் பின்னர் இருவரும் அடிதடியில் ஈடுபட்டுள்ளனர். அதில் இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கொளத்தூரில் உள்ள மருத்துவமனையில் நித்யா அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து மருத்துவமனை நிர்வாகம் போலீஸிடம் புகார் அளிக்க போலீசார் இருவரையும் தனித்தனியே அழைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

  • actress who starred with Ajith and Vijay is in a pathetic state படுக்கைக்கு அழைத்த நண்பர்கள்.. அஜித், விஜயுடன் நடித்த நடிகையின் பரிதாப நிலை!