நிஜமாவே நீங்க டான் தான்… பில்லா 2 படப்பிடிப்பின் போது அஜித்தின் க்யூட்டான செயல் : வைரலாகும் வீடியோ!
Author: Vignesh13 February 2023, 8:30 pm
கடந்த 11ம் தேதி பொங்கல் விருந்தாக வெளிவந்த துணிவு திரைப்படம் மக்கள் அமோக வரவேற்பினை பெற்று மாபெரும் வெற்றியடைந்துள்ளது.
எச். வினோத் – அஜித் கூட்டணியில் மூன்றாவது வெளிவந்த இப்படம் வசூலில் தொடர் சாதனைகளை புரிந்து வருகிறது.தமிழ்நாடு மட்டுமின்றி உலகளவிலும் எதிர்பார்த்ததை விட வசூல் குவித்து வருகிறதாம் துணிவு.
இந்நிலையில், வேதாளம் படத்திற்கு பிறகு கேரளாவில் அஜித்துக்கு ஹிட் படமாக துணிவு அமைந்துள்ளது என தெரியவந்துள்ளது. இதுமட்டுமின்றி உலகளவில் ரூ. 20 கோடிக்கும் மேல் தயாரிப்பாளருக்கு லாபத்தை கொடுத்துள்ளாதாம் துணிவு. இதுவே துணிவு படத்திற்கு மாபெரும் வெற்றி என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், அஜித்தின் திரைப்பயணத்தில் ரசிகர்களால் அதிகம் ரசிக்கப்பட்ட படம் பில்லா. எத்தனை முறை பார்த்தாலும் ஒரு சலிப்பு தன்மை இருக்காது என்று சொல்லும் அளவிற்கு மாஸ் கதைக்களம், தெறி பாடல்கள், சரவெடி கார் ரேஸ் காட்சிகள் என படம் முழுவதுமே ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக இருக்கும்.
இப்பட வெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகமும் தயாரானது. ஆனால் அது அந்த அளவிற்கு மக்களிடம் போய் சேரவில்லை என்று சொல்லலாம், தற்போது பில்லா 2 படப்பிடிப்பின் மேக்கிங் காட்சி ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
Billa 2 making 💥🔥
— Ponniyin Selvan (@ShamRahmaniac) February 12, 2023
1st time seeing this video 😳🔥
AK looks wholesome 😍❤️🔥 pic.twitter.com/C0VAyOwK7Z