டாக்டர் ஆகணும்னா கேட்டரிங் படிக்கணும்? மண்டையை பிச்சிக்க வைத்த தலைவாசல் விஜய்? 

Author: Prasad
25 April 2025, 11:41 am

உன் Goal என்ன?

டாக்டர் ஆகவேண்டும், Engineer ஆக வேண்டும், வக்கீல் ஆகவேண்டும், முதல்வர் ஆகவேண்டும் என பலருக்கும் பல இலக்குகள் இருக்கும். அந்த இலக்குகளோடுதான் தங்களுடைய வாழ்க்கை பயணத்தை மேற்கொள்வார்கள். அதே போல் இன்னொரு பக்கம் வாழ்க்கை எந்த பாதையில் நம்மை அழைத்துச் செல்கிறதோ அந்த பாதையில் நாம் போய்க்கொள்வோம் என பலர் இருந்துவிடுவார்கள். அந்த வகையில் பிரபல நடிகரான தலைவாசல் விஜய் தனது லட்சியங்களை குறித்து பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி குழப்பத்தை உண்டு செய்துள்ளது. 

thalaivaasal vijay shared about his goals video viral as a meme

வைரல் ஆன வீடியோ?

நடிகர் தலைவாசல் விஜய் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்டார். அப்போது அவர் அப்பேட்டியின் ஊடே, “நான் Bsc Maths படித்தேன். அதன் பிறகு Film Technology படித்தேன், இதன் பிறகு கேட்டரிங்கும் படித்தேன்” என கூறியிருந்தார். அப்போது நிருபர், “மூன்றுக்குமே சம்பந்தம் இல்லையே” என்று கேட்டதற்கு “நான் டாக்டராக ஆகவேண்டும் என விரும்பினேன்” என கூறினார். இந்த வீடியோ துணுக்குதான் தற்போது மீம் ஆக வலம் வருகிறது. 

ஆனால் உண்மையில் அவர் கூற வந்தது என்னவென்றால், “எனக்கு அறிவியல் படிக்கவேண்டும் என ஆசை. ஆனால் அந்த காலகட்டத்தில் இப்போது இருக்கிற பசங்களுக்கு உள்ள சுதந்திரம் அப்போது எங்களுக்கு இல்லை. என்னை Maths படிக்க சொன்னார்கள், ஆதலால் படித்தேன். ஆனால் எனக்கு விருப்பம் இல்லை” என்பதுதான். 

Maths படித்த பிறகு அவர் அவரது விருப்பப்படி பல வேலைகள் செய்து, அதன் பின் அவர் விருப்பப்பட்டதை படிக்கத் தொடங்கினாராம். இவ்வாறு அப்பேட்டியில் கூறியுள்ளார். 

  • red card issued to serial actress raveena daha இனி ஒரு வருஷத்துக்கு நடிக்க கூடாது- பிரபல சீரீயல் நடிகைக்கு ரெட் கார்டு? அதிர்ச்சியில் ரசிகர்கள்…
  • Leave a Reply