நிஜ அரிவாளை வைத்து கொண்டு ‘வெட்டவா’ என்று கேட்ட விஜயகாந்த்… உயிரை பணயம் வைத்த நடிகர்.. பல வருடங்களுக்கு பிறகு கூறிய உண்மை..!
Author: Vignesh24 November 2022, 12:45 pm
80 மற்றும் 90 காலகட்டத்தில் நடிகர் ரஜினி, கமலுக்கு இணையாக நடித்து வந்தவர் தான் விஜயகாந்த். மேலும், இவர் தன்னை நம்பி வருபவர்களுக்கு எப்பொழுதும் பல உதவிகளை செய்து வருவார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இவர் பயப்படாமல் தனக்கு என்ன தோன்றுகிறதோ அதை வெளிப்படையாக பேசும் குணம் கொண்டவர்.
இப்படி ஒரு நிலையில் விஜயகாந்த் பற்றி சமீபத்தில் நடிகர் தலைவாசல் விஜய் சில தகவல்களை வெளியிட்டுள்ளார். அது என்னவென்றால் ஒரு சண்டைக் காட்சியில் அருவாள் இல்லாமல் உண்மையான அரிவாளை வைத்து அந்த காட்சி எடுக்கப்பட்டது. அப்பொழுது நடிகர் விஜயகாந்த் என்னிடம் வந்து என் மேல் உனக்கு நம்பிக்கை இருந்தால் உண்மையான அருவாளை வைத்து வெட்ட வா என்று விஜயகாந்த் என்னிடம் கேட்டார்.
அதற்கு நான் ஒரு ரெண்டு நிமிடம் தனியாக சென்று யோசித்து விட்டு, அதன் பிறகு சரி என்று ஒப்புக்கொண்டேன். அவர் தெரியாமல் என்னுடைய நிஜக்கையை வெட்டினாலும் அவர் என்னை கைவிடமாட்டார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கின்றது என்று அன்று நான் அவரிடமும் சொன்னேன். சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் தலைவாசல் விஜய் கூறியுள்ளார். இந்த தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது.