தலைவர் 169 conform…ஒரே ஒரு போட்டோவில் மொத்த வதந்திக்கும் ஃபுல்ஸ்டாப் வைத்த சூப்பர் ஸ்டார்: ட்விட்டரை தெறிக்க விடும் #Thalaivar169..!!

Author: Rajesh
20 April 2022, 1:55 pm

சென்னை : தலைவர் 169 படம் பற்றி சோஷியல் மீடியாவில் அதிக விவாதங்கள் வதந்திகள் பரவி வந்த நிலையில், இவற்றிற்கு ஒரே ஒரு போட்டோவை போட்டு பதில் சொல்லி, அனைவரையும் வாயடைக்க வைத்து விட்டார் சூப்பர்ஸ்டார்.

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடித்த பீஸ்ட் படம் பற்றி பலரும் கலாய்த்து, நெகடிவ் கமெண்ட்களை கொடுத்தனர். விஜய்க்கு ஆதரவாகவும் சிலர் விவாதம் செய்து வருகின்றனர்.

பீஸ்ட் படம் வெற்றியா, தோல்வியா என்ற விவாதம் ஒரு பக்கம் ஓடிக் கொண்டிருக்கிறது. இதற்கிடையில் சமீபத்தில் பீஸ்ட் படம் பார்த்த ரஜினி, செம அப்செட் ஆகி விட்டதாகவும், அதனால் தலைவர் 169 படத்தை இயக்கும் பொறுப்பை நெல்சனுக்கு பதில் வேறு ஒரு டைரக்டரிடம் கொடுக்க ரஜினி முடிவு செய்திருப்பதாக வதந்தி பரவியது.

அட்லி, சிறுத்தை சிவா, தேசிங்கு பெரியசாமி, கே.எஸ்.ரவிக்குமார் என பல டைரக்டர்களின் பெயர்கள் தலைவர் 169 டைரக்டர் லிஸ்டில் இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் அது எதுவும் உண்மையில்லை. நெல்சன் தான் தலைவர் 169 படத்தை இயக்க போகிறார். இருந்தாலும் பீஸ்ட் படத்தை பார்த்த பிறகு, ஏற்கனவே தான் ஓகே செய்த தலைவர் 169 கதையில் சில மாற்றங்களை செய்யச் சொல்லி ரஜினி கூறி உள்ளார்.

இதற்காக ஜுலை மாதம் வரை நெல்சன் டைம் கேட்டுள்ளார். இதற்கு ரஜினி ஓகே சொல்லி விட்டதால், ஜுலை மாதத்தில் புதிய கதையுடன் தலைவர் 169 ஷுட்டிங் துவங்கப்பட உள்ளதாக நேற்று கூறப்பட்டது. இதற்கிடையில், நெல்சன் மீது ரஜினி மற்றும் சன் பிக்சர்ஸ் அதிருப்தியில் இருப்பதால் தலைவர் 169 படம் கைவிடப்பட்டதாகவும் சோஷியல் மீடியாவில் வதந்தி பரவியது.

டைரக்டர் மாற்றப்படுகிறார் என்ற நிலையை தாண்டி படமே கை விடப்படுவதாக தகவல் பரவியதால், நெல்சன் உடனடியாக தனது ட்விட்டர் பக்கத்தில், கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் படங்களின் பட்டியலில் தலைவர் 169 படத்தையும் சேர்த்து, அதன் டைரக்டர் தான் தான் என்பதை உறுதி செய்தார். வதந்திகள், விவாதங்கள், குழப்பங்களை தீர்க்கவும், அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தனது ட்விட்டர் பக்கத்தின் கவர் போட்டோவில் தலைவர் 169 படத்தின் ஃபர்ஸ்ட் லுக்காக வெளியிடப்பட்ட தனது போட்டோவை மாற்றி உள்ளார் ரஜினி.

கருப்பு கோட் சூட்டில், கால் மேல் கால் போட்டு கெத்தாக அமர்ந்திருக்கும் போட்டோவை பதிவிட்டு, தலைவர் 169 படத்தை கன்ஃபார்ம் செய்து விட்டார். இதனால் ரசிகர்கள் குஷியாகி விட்டனர். ரஜினி செய்த இந்த காரியத்தால் உடனடியாக தலைவர் 169 பற்றிய யூகங்கள், வதந்திகள் முடிவுக்கு வந்து விட்டன. இதனால் ட்விட்டரில் #Thalaivar169 ஹேஷ்டேக் தொடர்ந்து டிரெண்டிங்கில் இருந்து வருகிறது.

  • வாடி வாசலில் களமிறங்கிய இளம் நடிகை…லேட்டஸ்ட் தகவலால் உற்சாகத்தில் ரசிகர்கள்..!