அட… இந்த நடிகர்தான் தலைவர் 170 படத்தின் வில்லனா…? ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்..!

Author: Vignesh
3 October 2023, 2:57 pm

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்திற்கு தற்போது 72 வயது ஆகிறது. இன்னுமும் ஸ்லிம் பிட் தோற்றத்தை வைத்து மாஸ் ஹீரோவாக திரைப்படங்களில் நடித்து வருகிறார். அவருக்கு அடுத்து எத்தனை இளம் நடிகர்கள் வந்தாலும் கனவில் கூட சூப்பர் ஸ்டார் இடத்தை நிரப்பவே முடியாது.

தற்போது நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை தொடர்ந்து அவரது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் லால்சலாம் படத்தில் நடித்து வருகிறார். அண்மையில் கூட இப்படத்தின் போஸ்டர் வெளியாகி ட்ரோல் செய்யப்பட்டது.

லால்சலாம் படத்தை முடித்த பின்னர் ரஜினி டிஜே ஞானவேல் இயக்கத்தில் புதிய படமொன்றில் நடிக்கவுள்ளார். லைக்கா நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. இப்படத்தின் கதையை கேட்டு ரஜினி ஓகே சொல்லிவிட படப்பிடிப்பு இன்னும் சில மாதங்களில் துவங்கவுள்ளது. இதனிடையே, தலைவர் 170 படத்தில் யார்யாரெல்லாம் இணைந்துள்ளனர் என நேற்றில் இருந்து அறிவிப்பு ஒவ்வொன்றாக வெளியாகிறது.

rajini-updatenews360

இந்நிலையில் நேற்று படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பை படக்குழுவினர் துவங்கியுள்ளனர். அதன் தொடர்ச்சியாக இன்றும் படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகளின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

அதில் முதலாக சென்சேஷன் சென்சேஷன் நடிகை துஷாரா விஜயன் தலைவர் 170 இணைந்துள்ளதாக அறிவித்துள்ளன. நடிகை துஷாரா விஜயன் சார்பட்டா பரம்பரை, நட்சத்திரங்கள் நகர்கிறது, அநீதி ஆகிய படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரை தொடர்ந்து பிரபல நடிகை ரித்திகா சிங் படத்தில் இணைந்துள்ளார். இவர் இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து போலீஸ் வேடத்தில் நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

முன்னதாக தெலுங்கு நடிகர் ராணா டகுபதி இப்படத்தில் நடிக்கிறார் என அறிவித்துள்ளனர். இவரை தொடர்ந்து இப்படத்தில் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த நடிகர் பகத் பாசில் இணைந்துள்ளார்.

கண்டிப்பாக ரஜினி – பகத் காட்சிகள் திரையரங்கில் தெறிக்கும் என ரசிகர்கள் தற்போதே கமெண்ட் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

  • Virat Kohli fake video அனுஷ்கா சர்மா சொன்னதும் வீடீயோவை டெலீட் பண்ணிட்டேன்..அசிங்கப்பட்ட நடிகர் மாதவன்.!