தலைவர் 171 ஹாலிவுட் படத்தின் காப்பியா?.. ஆரம்பமே அமர்க்களமா இருக்கே..!

Author: Vignesh
5 April 2024, 11:07 am

கோவையை சேர்ந்த இளம் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மாநகரம் படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து, கைதி படத்தை இயக்கை பெரிய கவனத்தை பெற்றார். இதன் பின்னர், விஜய்யுடன் சேர்ந்து மாஸ்டர் படத்தை இயக்கினார். படம் மாஸ் ஹிட் ஆனது. தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநராக மாறினார்.

மேலும் படிக்க: என்னால தான் அவரு இறந்துட்டாரு.. உருக்கமாக பேசிய ரெடின் கிங்ஸ்லி மனைவி..!

அந்த வெற்றியை தொடர்ந்து கமல்ஹாசனை வைத்து விக்ரம் படத்தை இயக்கினார். படம் மெகா ஹிட் அடித்து வசூல் சாதனை குவித்தது. இதையடுத்து, மீண்டும் விஜய்யுடன் இணைந்து லியோ படத்தை இயக்கினார். இப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றது. லியோ படத்தை தொடர்ந்து விஜய் அடுத்ததாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து தலைவர் 171 படத்தை இயக்கவுள்ளார்.

மேலும் படிக்க: டிஷ்யூம்.. டிஷ்யூம்.. அவர் கூட 6 வருஷமா பேச்சுவார்த்தை இல்லை: மனம் திறந்த ஜிவி பிரகாஷ்..!

இப்படம், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகிறது. தலைவர் 171 படத்தில் அனிருத் இசையமைக்கிறார். அன்பறிவு இப்படத்தில் ஸ்டன்ட் மாஸ்டராக கமிட் ஆகியுள்ளார். தலைவர் 171 படத்தின் முதற்கட்ட பணிகள் தற்போது, மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஷூட்டிங் வரும் ஜூன் மாதத்தில் இருந்து தொடங்கும் என லோகேஷ் சமீபத்திய பிரஸ்மீட் ஒன்றில் தெரிவித்து இருந்தார்.

rajini - updatenews360

இந்த நிலையில், தலைவர் 171 படத்தின் டைட்டில் வரும் ஏப்ரல் 22 ஆம் தேதி டீசருடன் வெளியிடப்படும் எனவும் அவர் தெரிவித்திருந்தார். இதனால், ரசிகர்கள் கொண்டாட்டத்தில் இருந்தனர். தற்போது, யாரும் எதிர்பார்க்காத விதமாக போஸ்டர் வெளியாகி உள்ளது. அதாவது, ரஜினி கையில் வாட்ச் கை விளங்காக மாட்டப்பட்டு இருக்கிறது.

மேலும், பின்னணியில் வாட்ச் தான் போஸ்டரில் இடம் பெற்றிருக்கிறது. அதனால் இது டைம் ட்ராவல் கதையாக இருக்கும் என தெரிகிறது. முன்னதாக, தலைவர் 171 படத்தில் ரஜினியின் கதாபாத்திரம் நல்லவன் கெட்டவன் என்று இல்லாமல் இரண்டிற்கும் இடையில் இருக்கும் என்றும், இதுவரை ரஜினி நடித்திராத ஒரு கேரக்ராக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம் என்றும் லோகேஷ் தெரிவித்து இருந்தார். தற்போது அவர் சொன்ன படி ரஜினி கைதியாக இந்த போஸ்டரில் இருகிறார். கைகடிகாரத்தால் செய்யப் பட்டவிலங்கு அவர் கையில் மாட்டப் பட்டிருப்பது இந்தப் படம் டைம் டிராவலை மையப்படுத்தி இருக்கும் என்று ரசிகர்கள் தெரிவித்து வருகிறார்கள்.

lokesh kanagaraj

இந்தநிலையில், தலைவர் 171 படத்தின் கதை ஹாலிவுட் திரைப்படமான The Purge படத்தில் எடுக்கப்பட்டுள்ளது என பிரபல பத்திரிகையாளர் தகவலை பகிர்ந்து உள்ளார். ஹாலிவுட்டில் James DeMonaco 2013 ஆம் ஆண்டு வெளிவந்த இந்த படம் இன்ஸ்பிரேஷன் ஆகி தான் தலைவர் 171 படத்தின் கதை லோகேஷ் எழுதியுள்ளார். லியோ படம் வெளிவந்ததை A History of Violence படத்தின் இன்ஸ்பிரேஷன் என்பதை நாம் அறிவோம். அதேபோலதான் தலைவர் 171 இன்ஸ்பிரேஷன் என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

  • Rafael Nadal retirement reaction by Dhanush ஓய்வு அறிவிப்பு.. நடிகர் தனுஷின் உருக்கமான பதிவு..
  • Views: - 240

    0

    0