கேரவனுக்கு கட்டாயப்படுத்தி கூப்பிட்ட ஜோதிகா – நடந்த சம்பவத்தை கூறிய விஜய்!

Author: Rajesh
21 February 2024, 1:07 pm

புஷ் புஷ் நடிகையாக கொழுக் மொழுக் அழகியாக அக்கட தேசத்தில் இருந்து தமிழ் சினிமாவிற்கு நடிக்க வந்தவர் நடிகை ஜோதிகா. இந்தி சினிமாவில் நடித்து தனது கெரியரை ஆரம்பித்த ஜோதிகா வாலி படத்தில் காமியோ ரோலில் நடித்து அறிமுகமானார் .

முதல் படத்திலே நல்ல அறிமுகத்தை பெற்ற அவர் தொடர்ந்து பூவெல்லாம் கேட்டுப்பார், சிநேகிதியே, குஷி, பூவெல்லாம் உன் வாசம், பிரியமான தோழி, தூள், காக்க காக்க, மன்மதன், பேரழகன், சந்திரமுகி, சில்லுனு ஒரு காதல் இப்படி பல்வேறு ஹிட் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

jyothika-updatenews360

காக்க காக்க படத்தில் நடித்த போது நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார்.திருமணத்திற்கு பிறகு சில ஆண்டுகள் நடிக்காமல் சினிமாவை விட்டு ஒதுங்கியே இருந்தார். பின்னர் மீண்டும் இரண்டாவது இன்னிங்க்ஸை துவங்கி கலக்கி வருகிறார்.

தற்போது இவர்கள் குடும்பத்தோடு மும்பையில் செட்டில் ஆகிவிட்டனர். இந்நிலையில் நடிகை ஜோதிகா குறித்து பேசியுள்ள தலைவாசல் விஜய், ” ஷூட்டிங் போது ஒரு முறை எனக்கு அதிகமா முதுகு வலியா இருந்துச்சு.அதனால் நான் சேரில் சாய்ந்து உட்கார்ந்து இருந்தேன். அப்போது அங்கு வந்த ஜோதிகா என்னிடம் விசாரித்து விட்டு கேரவனில் வந்து படுத்துக்கோங்க என்று சொன்னார்.

நான் வேண்டாம் என்று சொல்லியும் ஜோதிகா என்னை கட்டாயப்படுத்தி கேரவேனில் ரெஸ்ட் எடுத்துக்க சொன்னார். அவ்வளவு அக்கறையானவர். உண்மையிலே நிஜத்திலும் ஜோதிகா என்னுடைய தங்கை போல தான் அப்போ நடந்து கொண்டாங்க என்று தலைவாசல் விஜய் பேட்டியில் கூறியுள்ளார்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 417

    0

    0