ஆள விடுங்கடா சாமி… அடுக்கடுக்கான பிரச்சனை… அவசரமாக தனி விமானத்தில் பறந்துசென்ற விஜய் – வைரல் வீடியோ!

Author: Shree
18 October 2023, 2:06 pm

விஜய் நடிப்பில் உருவான லியோ திரைப்படம் வரும் 19ஆம் தேதிக்கு திரைக்கு வருகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக த்ரிஷா நடித்துள்ளார். லியோ படத்தின் சிறப்பு காட்சிகளுக்கு ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

லியோ படம் வெளியீட்டு தேதி அறிவிப்பு வெளியானதில் இருந்து பல்வேறு தடங்கல்களை சந்தித்து வருகிறது. டிரெய்லர் வெளியீட்டின் போது ரோகிணி தியேட்டரில் இருக்கைகளை ரசிகர்கள் உடைத்து சேதப்படுத்தியது, இசை வெளியீட்டு விழா கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது என பல்வேறு தடைகள் ஏற்பட்டன.

அதுமட்டுமில்லாமல், லியோ படத்திற்கு அதிகாலை 4 மற்றும் 7 மணிக்கு சிறப்பு காட்சிகளை திரையிட அனுமதிக்க வேண்டும் என்ற படக்குழுவின் கோரிக்கையை தமிழக அரசு நிராகரித்தது. படம் வெளியாகும் 19ம் தேதி முதல் 24ம் தேதி வரையிலான 5 நாட்களுக்கு 5 காட்சிகளை வெளியிட மட்டும் அனுமதி வழங்கப்பட்டது.

மேலும் முதல் காட்சி காலை 9 மணிக்கு தான் வெளியிடவேண்டும் என தமிழக அரசு திட்டவட்டமாக அறிவித்து அதிர்ச்சி கொடுத்தது. அதையடுத்து சென்னையில் பிரபலமான திரையரங்கு ரோகினி தியேட்டரில் லியோ படம் வெளியிடப்படாது என அறிவிப்பு பலகையில் எழுதியுள்ளது ரசிகர்களை அதிருப்திக்குள்ளாக்கியது. காரணம் ட்ரைலர் வெளியீட்டின் போது விஜய் ரசிகர்கள் தியேட்டரை அடித்து நொறுக்கி சேதப்படுத்தியதால் தான் என கூறப்படுகிறது.

இப்படி லியோ படத்திற்கு அடுக்கடுக்கான பிரச்சனை வருவதை பார்த்து விஜய் தற்போது அவசர அவசரமாக கிளம்பி தனி விமானத்தில் வெளி நாட்டிற்கு கிளம்பி சென்றுள்ளார். ப்ரைவேட் ஜெட்டில் இருந்து இறங்கி அங்கிருந்து காரில் ஏறி செல்லும் லேட்டஸ்ட் வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வெளியாகி செம வைரலாகியுள்ளது. இதோ அந்த வீடியோ:

  • kalanidhi maran office 8th floor was locked for many years கலாநிதி மாறன் அலுவலகத்தில் அமானுஷ்யம்? 8 ஆவது மாடியில் அப்படி என்ன இருக்கிறது?