அடக்கடவுளே… தளபதி 67 படத்தின் டைட்டில் லீக்… அதிர்ச்சியில் படக்குழு : அந்த படத்தோட காப்பியா?!!

Author: Udayachandran RadhaKrishnan
3 February 2023, 1:54 pm

மாநகரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். முதல் படத்திலேயே அனைவரின் கவனத்தை ஈர்த்த லோகேஷ், தொடர்ந்து கைதி, மாஸ்டர், விக்ரம் என பட்டையை கிளப்பி வருகிறார்.

விஜய், கமல் என முன்னணி நடிகர்களை வைத்து தன்னிடம் சரக்கு இருக்கிறது என்பதை நிரூபித்த லோகேஷ் கனகராஜ், அடுத்து கார்த்தியின் கைதி, விஜய்யின் மாஸ்டர், கமலின் விக்ரம் என ஹிட் படங்களை கொடுத்து வருகிறார்.

இந்நிலையில் மாஸ்டர் படத்திற்கு பிறகு மீண்டும் விஜய்யுடன் கூட்டணி வைத்துள்ள லோகேஷ் கனகராஜ் தளபதி 67 படத்தை இயக்குகிறார்.

இதற்காக படக்குழு காஷ்மீர் சென்றுள்ளது. பூஜையுடன் படப்பிடிப்பு வேலைகளை தொடங்கியுள்ள லோகேஷ் கனகராஜ் கடந்த மூன்று நாட்களாக தளபதி 67 படத்தின் அப்டேட்டுகளை வெளியிட்டு வருகிறார்.

தளபதி 67 படத்தில் நடிக்கும் நட்சத்திர பட்டாளத்தை பார்த்தே பெருமூச்சு விட்டனர் ரசிகர்கள். இந்த நிலையில் யாருமே எதிர்பார்க்காத வகையில் இன்று டைட்டில் வெளியிடப்படுட்ம என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. ஆனால் டைட்டில் இணையத்தில் லீக்காகி படக்குழுவை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அதாவது லோகேஷ் கனகராஜ் நேற்று டைட்டில் அப்டேட்டுக்காக வெளியிட்ட போஸ்டரை கழுகுடன் ஒப்பிட்டு படத்திற்கு ஈகிள் என்பதுதான் தலைப்பு என கூறி வருகின்றனர் நெட்டிசன்கள்.

  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!