தளபதி 67 படத்தின் டைட்டில் LEO : படக்குழு வெளியிட்ட வீடியோவில் இதை கவனிச்சீங்களா?

Author: Udayachandran RadhaKrishnan
3 February 2023, 5:14 pm

வாரிசு படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘தளபதி 67’ படத்தில் நடித்து வருகிறார்.

செவன் கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் சார்பில் லிலித்குமார் இந்த படத்தை தயாரித்து வருகிறார். இந்த படத்திற்கு அனிரூத் இசையமைத்து வருகிறார்.

இந்த படத்திற்கான எதிர்பார்ப்புகள் எக்கச்சக்கமாக எகிறிக் கொண்டிருக்கிறது. இந்த படத்திலிருந்து வெளியாகும் அறிவிப்புகள் ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பெயரிடப்படாத இந்த படத்தை ‘தளபதி 67’ என்றே குறிப்பிட்டு வருகின்றனர். இந்த நிலையில் கடந்து இரண்டு தினங்களாக படத்தின் அப்டேட் வந்து குவிந்த வன்ணம் உள்ளது.

இந்த நிலையில் படத்தின் டைட்டில் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் தளபதி 67 படத்தின் டைட்டில் வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு லியோ என பெயர் வைத்துள்ளனர்.

மேலும் ஆயுதபூஜையை முன்னிட்டு அக்டோபர் 19ஆம் தேதி படம் வெளியாகும் என அந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ளனர். வாரிசு முடிந்த கையோடு அடுத்தடுத்து அப்டேட் கொடுத்து வருகிறார் லோகேஷ் கனகராஜ்.

  • Tamil cinema actresses 2025 2025-ல் கோலிவுட்டை கலக்க போகும் இளம் நடிகைகள்…பெரும் எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!
  • Views: - 662

    0

    0