விக்ரம் பட பாணியில் ‘தளபதி 67’ : எங்க ?.. எப்போ ?.. தெறி அப்டேட்..!
Author: Vignesh21 January 2023, 12:30 pm
வாரிசு படத்தை தொடர்ந்து விஜய் – லோகேஷ் கனகராஜ் இரண்டாவது முறையாக தளபதி 67 படத்தில் இணைகிறார்கள். இப்படத்தில் நடிக்கும் நடிகர் – நடிகைகள் குறித்தும், கதை குறித்தும் பல தகவல்கள் அவ்வப்போது வெளியாகிய வண்ணம் உள்ளன.
ஏற்கனவே மாஸ்டர் எனும் மிகப்பெரிய வெற்றியை விஜய் – லோகேஷ் கனகராஜ் கூட்டணி கொடுத்துள்ளதால், தளபதி 67 படத்தின் மீது மாபெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தளபதி 67 படத்தில் திரிஷா, கவுதம் மேனன், மிஸ்கின், சஞ்சய் தத், அர்ஜுன், பிரியா ஆனந்த் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள். அதன்படி இப்படத்தின் அறிவிப்பு வருகிற ஜனவரி 26ம் தேதி வெளியாகும் என தெரியவந்துள்ளது.
மேலும், விக்ரம் படத்திற்கு எப்படி அறிவிப்பு வீடியோ ஒன்று வெளிவந்ததோ, அதே பாணியில் தளபதி 67ன் அறிவிப்பு வீடியோ வெளியாகும் என கூறப்படுகிறது.

இந்த வீடியோவில் விஜயின் கதாபாத்திரம் எப்படி இருக்கும் என்று தெரிந்துவிடும் என்று தெரிவிக்கின்றனர். இதனால் வருகிற ஜனவரி 26-காக தான் ரசிகர்கள் தற்போது காத்துகொண்டு இருக்கிறார்கள்.
கொடைக்கானலில் தளபதி 67 படத்தின் 2வது கட்டப்படப்பிடிப்பு தொடங்குவதாகவும், இதில் விஜய் மற்றும் மிஷ்கின் பங்குபெறும் காம்பினேஷன் காட்சிகளுக்காக 10 நாட்கள் கொண்ட படப்பிடிப்பு நடப்பதாக உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
மற்ற நடிகர்கள் ஜனவரி 27-ஆம் தேதிக்கு பின் இணைவதாகவும், நீண்ட 30 நாட்கள் கொண்ட படப்பிடிப்பாக தளபதி 67 படப்பிடிப்பு இருக்கபோவதாகவும், கூறப்படுகிறது.
இதற்கென நடிகர் விஜய் மற்றும் மிஷ்கின் இருவரும் மதுரைக்கு ஒன்றாக ஒரே விமானத்தில் செல்வதாக தகவல் கசிந்துள்ளது.