பட்ட கஷ்டத்தை எல்லாம் சொல்லப்போகும் தளபதி 68 – விஜய்யின் வாழ்க்கை வரலாற்றை படமாக்கும் வெங்கட்பிரபு!

Author: Shree
24 July 2023, 4:52 pm

தமிழ் சினிமாவின் கமர்சியல் ஹீரோவான விஜய் தற்போது லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படம் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. அதனை தொடர்ந்து அடுத்ததாக தளபதி 68 படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தை பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கவுள்ளார் . இதில் விஜய்க்கு ஜோடியாக தமன்னா, கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார்கள். இப்படத்தில் ஒளிப்பதிவாளர் ரிச்சர்ட் எம்நாதன் ஒளிப்பதிவு செய்கிறார்.

இப்படம் அரசியல் கதைக்களத்தில் உருவாக உள்ளதால். குறிப்பாக சிம்பு நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான மாநாடு திரைப்படம் போன்று தளபதி 68 அரசியல் பேசும் படமாக அமையலாம் என எதிர்பார்க்கலாம். குறிப்பாக இப்படத்தில் விஜய் ஆரம்ப காலத்தில் வாய்ப்புகள் நிராகரிக்கப்பட்டதில் இருந்து திரைப்படங்கள் வெளியாகும் போதெல்லாம் ஏற்பட்ட பிரச்சனைகள் வரை முழுக்க முழுக்க விஜய்யின் வரலாற்று கதையாக இருக்கலாம் என கூறப்படுகிறது.

அத்துடன் இப்படத்தில் விஜய்யின் அரசியல் என்ட்ரி குறித்தும் எதிர்கால அரசியல் குறித்தும் பேசும் வகையில் இருக்குமாம். இப்படத்தின் கதைகளை விஜய்யே வெங்கட் பிரபுவிடம் ஒவ்வொரு சீன் ஆக சொல்கிறாராம். எனவே விஜய் என்னெல்லாம் சொல்கிறாரோ அதை எல்லாம் படமாக்கி அரசியல் பேசப்பவைக்கப்போகிறாராம் வெங்கட் பிரபு. குறிப்பாக விஜய்யிடம் அமலாக்கதுறையின் அதிகாரிகளால் ஏற்பட்ட கஷ்டங்களும் அதனால் மத்திய அரசின் பிரபலங்களை பழிவாங்கும் வகையில் இப்படம் எடுக்கப்படவுள்ளதாம். எவ்வளவு பிரச்சனை வந்தாலும் ஒரு கை பார்த்திடலாம் என விஜய் இப்படத்தில் துணிந்து பல விஷயங்களை பேசவிருக்கிறாராம்.

  • Bigg Boss Season 8 tamil Voice Over Artist பிக் பாஸ் குரலுக்கு சொந்தக்காரர் இவரா.. எல்லா மொழியிலும் பிண்றாரே..!!
  • Views: - 396

    0

    0