தமிழ் சினிமாவின் முன்னணி டாப் ஹீரோ என்ற அந்தஸ்தில் இருக்கும் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் திரிஷா. கெளதம் வாசுதேவ் மேனன், அர்ஜுன், மிஷ்கின், சஞ்சய் தத் உட்பட பலர் நடிக்கின்றனர்.
அனிருத் இசையமைத்துள்ள இப்படத்திற்கு விஜய் ரசிகர்கள் மிகப்பெரிய ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். காரணம் லோகேஷ் இயக்கத்தில் வெளிவரும் வரும் வித்தியாசமான, மரண மாஸாக கொண்டாடப்படும் படமாக இருக்கும் என்பதால் தான். அண்மையில் இப்படத்தின் பாடல்கள் வெளியாகி படத்தின் மீதான கவனத்தை அதிகரித்தது. இந்நிலையில், லியோ படம் வருகிற அக்டோபர் மாதம் வெளியாக உள்ளது.
இந்நிலையில், விஜய்யின் வலது கையாக இருக்கும் புஸ்ஸி ஆனந்த் சினிமாவை கைவிட்டுவிட்டு முழு நேரம் விஜய் அரசியலில் இறங்குமாறு நச்சுறுத்துக் கொண்டிருப்பதாகவும், மேலும், இவர்களிடமிருந்து கொஞ்சம் விலகி ஓய்வெடுத்து விட்டு வரலாம் என்று முடிவிலும் விஜய் வெளிநாடு சென்றதாகவும், இன்னொரு பக்கம் விஜய் அவருடைய மனைவி, மகன், மகள் மூவரும் வெளிநாட்டில் இருப்பதால் அவர்களை பார்ப்பதற்காக விஜய் சென்றுள்ளார் என்றும், தெரிவித்து வருகின்றனர்.
இப்படி விஜய் வெளிநாட்டு பயணம் குறித்து ஆளுக்கு அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப கருத்துக்களை ஒரு பக்கம் தெரிவித்து வரும் நிலையில், மற்றொரு காரணமும் முக்கியத்துவம் வாய்ந்ததாக சொல்லப்படுகிறது.
அதாவது, வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி 68 படத்தில் விஜய் நடிக்க உள்ளார். இப்படத்தில் ஜெய், அபர்ணாதாஸ் ஆகியோர் நடிக்கப்போவதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், தளபதி 68 படத்திற்கான VFX மற்றும் லுக் டெஸ்ட் பணிகளுக்காக விஜய், படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபு, தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி மற்றும் ஜெகதீஷ் ஆகியோர் வெளிநாட்டுக்கு சென்று உள்ளார்களாம்.
தமிழ்நாட்டில் மாத மாதம் கணக்கெடுக்கும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும் என ஆட்சிக்கு வரும் போது 2021ல் திமுக வாக்குறுதியளித்தது. இது…
ரசிகர்களுக்கான படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்த “குட் பேட் அக்லி” திரைப்படம் இன்று வெளியான நிலையில் இத்திரைப்படத்தை…
வடிவேலு மீதான புகார்கள் வடிவேலு மிகப் பெரிய காமெடி நடிகராக வளர்ந்த பிறகு அவர் தனது சக நடிகர்களை மதிக்க…
அஜித் நடிப்பில் இன்று வெளியானது குட் பேட் அக்லி, முதல் காட்சி முடிந்ததும் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். ஆனால்…
அரியலூர் மாவட்டம், அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துவிட்டு மறுநாள் காவல் நிலையத்திற்கு வர வேண்டுமா என்பதற்காக அங்கு…
ரசிகர்களுக்கான திரைப்படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் இன்று வெளியாகியுள்ளது “குட் பேட் அக்லி” திரைப்படம். ரசிகர்களின் மிகப்பெரிய…
This website uses cookies.