தமிழ் சினிமாவின் கமர்சியல் ஹீரோவான விஜய் கடைசியாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படத்தில் நடித்திருந்தார். அந்த திரைப்படம் அக்டோபர் 19ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றது.
அதனை தொடர்ந்து அடுத்ததாக தளபதி 68 படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தை பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கவுள்ளார் . அண்மையில் இப்படத்தின் பூஜை பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் பல நட்சத்திர பிரபலங்கள் நடிக்க உள்ளனர்.
குறிப்பாக பிரஷாந்த், மோகன், பிரபு தேவா, லைலா, சினேகா, மீனாட்சி சவுத்ரி என பல நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள். இதன் முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தாய்லாந்தில் நடைபெற உள்ளது.
தளபதி 68 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் உடன் தலைப்பு வருகிற புத்தாண்டு அன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளது. இந்நிலையில், தளபதி 68 படத்தின் தலைப்பு இதுதான் என்று செம மாஸ் அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, விஜயின் தளபதி 68 படத்திற்கு G.O.A.T என தலைப்பு வைத்துள்ளார்களாம். G.O.A.T என்றால், Greatest Of All Time என்பதே இதன் முழு அர்த்தமாம். இதனை கேள்விப்பட்ட ரசிகர்கள் அனைவரும் தற்போது இணையதளத்தில் G.O.A.T எனும் ஹேஷ்டேக்கை டிரெண்ட் செய்து வருகின்றனர். மேலும், இதுகுறித்து அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாக விஜய் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துகொண்டு இருக்கிறார்கள்.
மேலும், தளபதி 68 படம் ஹாலிவுட் ரேஞ்சிற்கு இருக்கும் என்று கூறப்படுகிறது. அதாவது, ஹாலிவுட்டில் கடந்த 2012ஆம் ஆண்டு வெளிவந்த லூப்பர் படம் போன்ற கதைக்களம் தான் தளபதி 68 படம் என கூறப்பட்டு வருகிறது. மேலும், மாஸ்டர், பீஸ்ட், லியோ என தொடர்ந்து நடிகர் விஜய் ஆங்கில தலைப்புகளை அவரது படங்களுக்கு வைத்து வரும் நிலையில், கடும் விமர்சனங்களும் எழுந்து வருகின்றன. இந்நிலையில், தளபதி 68 படத்திற்கும் ஆங்கில தலைப்பு தான் வைக்கப்பட்டுள்ளது. இதற்கு நெட்டிசன்கள் பெயர் மட்டும் தமிழ்நாட்டின் தளபதினு வச்சுக்கிட்டு படத்துக்கு வைக்கிற தலைப்பு எல்லாம் இங்கிலீஷ் டைட்டிலா இருக்ககே என்று கலாய்த்து வருகின்றனர்.
ஆந்திர துணை முதல்வரும் ஜனசேனா கட்சி தலைவருமான பவன் கல்யாண் தமிழகத்தில் ஆன்மீக பயணம் மேற்கொண்டு கடந்த பிப்ரவரி மாதம்…
நிறைவேற்றப்பட்ட வக்ஃபு வாரிய மசோதா இன்று மக்களவையில் ஒன்றிய பாஜக அரசால் வக்ஃபு வாரிய சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.…
நஷ்டத்தில் தத்தளிக்கும் லைகா லைகா நிறுவனம் தமிழ் திரையுலகில் காலடி எடுத்து வைத்ததை தொடர்ந்து பல வெற்றித் திரைப்படங்களை கொடுத்தது.…
ஐபிஎல் 2025 தொடர் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் 10 அணிகளுக்கு இடையே நடந்து வரும் போட்டியில் புள்ளி பட்டியலில்…
கும்பமேளாவில் ருத்ராட்சை மாலை விற்றுக்கொண்டிருந்தவர் மோனாலிசா. இவரது புகைப்படம் இணையத்தில் படுவைலரானது. காரணம் பார்ப்பதற்கு நடிகை போலவும், கண்கள் பலரையும்…
மகனை இழந்த இமயம்… இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் மகனான மனோஜ் பாரதிராஜா கடந்த மார்ச் மாதம் 25 ஆம் தேதி…
This website uses cookies.