தமிழ் சினிமாவின் கமர்சியல் ஹீரோவான விஜய் தற்போது லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படம் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. அதனை தொடர்ந்து அடுத்ததாக தளபதி 68 படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தை பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கவுள்ளார் . ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்க உள்ள இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க உள்ளார்.
இதில் விஜய்க்கு ஜோடியாக தமன்னா, கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார்கள். இப்படத்தில் ஒளிப்பதிவாளர் ரிச்சர்ட் எம்நாதன் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படம் விளையாட்டை மையப்படுத்திய அரசியல் கதைக்களத்தில் உருவாக உள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக சிம்பு நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான மாநாடு திரைப்படம் போன்று தளபதி 68 விளையாட்டு அரசியல் பேசும் படமாக அமையலாம் என எதிர்பார்க்கலாம்.
இந்நிலையில் யாரும் எதிர்பார்க்காத வகையில் இப்படம் குறித்த ,சுவாரஸ்யமான தகவல் ஒன்று கிடைத்துள்ளது. ஆம், ‘தளபதி 68’ திரைப்படத்தில் வில்லனாக கிரிக்கெட் வீரர் தோனி நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகவலை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் பகிர்ந்து ட்ரெண்டாக்கி வருகின்றனர். கிரிக்கெட் வீரர் தோனி தற்போது திரைப்பட துறையில் முழு கவனத்தை செலுத்தி வருகிறார். ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியான LGM (Let’s Get Married) என்ற படத்தை தோனி தான் தயாரித்திருந்தார். அதுமட்டும் இல்லாமல் தளபதி 68 படம் விளையாட்டத்தை மையப்படுத்தி உருவாகுவதால் நிச்சயம் இது உண்மையான தகவலாக இருக்கலாம் என நம்ப முடிகிறது. இருந்தாலும் விஜய்க்கு வில்லனாக தோனி என்பதை தோனி ரசிகர்களால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. அதைவிட விஜய்யை வேணா வில்லனா நடிக்க சொல்லுங்க என கூறி வருகிறார்கள்.
வக்ஃபு சட்ட திருத்த மசோதா மக்களவை மற்றும் மாநிலங்கலவையில் நிறைவேற்றப்பட்டதை கண்டித்து வேலூர் மேற்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகம்…
சச்சின் ரீரிலீஸ்… விஜய் நடிப்பில் 2005 ஆம் ஆண்டு வெளியான “சச்சின்” திரைப்படம் 90ஸ் கிட்ஸின் மிகவும் விருப்பத்திற்குரிய திரைப்படமாக…
2025ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் சென்னை அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. குறிப்பாக முதல் போட்டியில் மும்பை அணியுடன்…
அபார முயற்சி, ஆனால்? ரஜினிகாந்தை நாம் திரையில் பல கதாபாத்திரங்களில் ரசித்து பார்த்திருப்போம். ஆனால் அனிமேஷனில் ரஜினிகாந்தை கொண்டு வந்த…
வக்பு வாரிய சட்டத்தருத்த மசோதா கடும் எதிர்ப்புக்கு மத்தியில் மக்களவையில் ஒரு நிறைவேற்றப்பட்டது. இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும்…
ரொமான்டிக் ஹீரோ டூ ஆக்சன் ஹீரோ சூர்யா தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானதில் இருந்து காதலை மையமாக வைத்து உருவான…
This website uses cookies.