தமிழ் சினிமாவின் கமர்சியல் ஹீரோவான விஜய் தற்போது லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படம் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. அதனை தொடர்ந்து அடுத்ததாக தளபதி 68 படத்தில் நடிக்க உள்ளார்.
இப்படத்தை பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கவுள்ளார் . இதில் விஜய்க்கு ஜோடியாக தமன்னா, கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார்கள். இப்படத்தில் ஒளிப்பதிவாளர் ரிச்சர்ட் எம்நாதன் ஒளிப்பதிவு செய்கிறார். இந்நிலையில் வருகிற ஜூன் மாதம் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் டைட்டில் குறித்த அப்டேட் வெளியாகலாம் என எதிர்பார்க்கலாம்.
இப்படம் அரசியல் கதைக்களத்தில் உருவாக உள்ளதால். குறிப்பாக சிம்பு நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான மாநாடு திரைப்படம் போன்று தளபதி 68 அரசியல் பேசும் படமாக அமையலாம் என எதிர்பார்க்கலாம்.
மேலும் வெங்கட் பிரபு படம் என்றாலே அதன் பின்னணியில் Game, Sixer, Reunion, Politics, Diet, Holiday, Hangover, Quickie, Hunt போன்ற ஆங்கில வார்த்தைகள் இருக்கும் அந்த வகையில் இந்த படத்திற்கு அவர் என்ன ஆங்கில டைட்டில் வைக்கப்போகிறார் என்பதை கொஞ்சம் பொறுத்திருந்து பார்ப்போம்.