தளபதி 69 பக்கா அரசியல் படம்… வெற்றிமாறன் இயக்கத்தில் வேற மாறி சம்பவம் செய்யப்போகும் விஜய்!

Author: Rajesh
10 February 2024, 4:03 pm

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருந்து வரும் விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் GOAT திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை முடித்த கையோடு விஜய் அரசியலில் இறங்கிடுவார் என கூறப்பட்டது. ஆனால், சினிமாவிற்கு டாட்டா காட்டும் கடைசி திரைப்படம் விஜய்யின் வரலாறு பேசும் திரைப்படமாக தரமாக இருக்கவேண்டும் என கருதி கடைசியாக தளபதி 69 படத்தில் நடிக்க முடிவெடுத்துள்ளாராம் விஜய்.

Vijay - Updatenews360

அதன்படி தமிழ் சினிமாவில் விரல்விட்டு எண்ணகூடிய அளவிற்கு சரித்திரம் பேசும் படங்களை எடுத்து மிரளவைக்கும் இயக்குனர் வெற்றிமாறனின் இயக்கத்தில் தளபதி 69 திரைப்படத்தில் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இத்திரைப்படம் கோட்டா நீலிமா என்பர் எழுதிய நாவல் ஷூஸ் ஆஃப் தி டெட் கதையை கொண்டு எடுக்கப்படவுள்ளதாம்.

இந்த கதையில் கோவிந்த் , கோபிநாத் இருவரும் சகோதரர்கள். இவர்களில் கோபிநாத் விவசாயம் செய்யமுடியாமல் தற்கொலை செய்துக்கொள்கிறார்.இதனையடுத்து தனது சகோதரனின் மரணத்திற்கு நீதி கேட்டு போராட்டம் நடத்துகிறார் கோவிந்த். இந்த நாவல் விவசாயிகளின் துயரங்களையும் அதன் பின்னணியில் இருக்கும் அரசியல் நிர்வாக தோல்விகளையும் தோலுரித்து காட்டியது.

vetrimaran

இந்த கதையை தான் தளபதி 69 படத்திற்காக அரசியல் , ஊழல், லஞ்சம் என சீன் பை சீன் பக்கா பொலிட்டிகல் கதையாக தயார் செய்துள்ளாராம் வெற்றிமாறன்.விஜய் அரசியலுக்கு வரவுள்ள நிலையில் கடைசி படமாக இது வெளியானால் தரமான அரசியல் படமாகவும், மிகச்சிறந்த அரசியல் என்ட்ரியாகவும் அமையும் என ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். ஷூஸ் ஆஃப் தி டெட் நாவலின் உரிமையை வெற்றிமாறன் ஏற்கனவே வாங்கி வைத்துவிட்டது குறிப்பிடத்தக்கது.

  • Bigg Boss Season 8 tamil Voice Over Artist பிக் பாஸ் குரலுக்கு சொந்தக்காரர் இவரா.. எல்லா மொழியிலும் பிண்றாரே..!!
  • Views: - 340

    0

    0