பூஜையுடன் துவங்கிய தளபதி 69 படப்பிடிப்பு – வைரலாகும் போட்டோஸ்!

Author:
4 October 2024, 3:09 pm

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வரும் தளபதி விஜய் தற்போது தளபதி 69 திரைப்படத்தில் கமிட்டாகி நடித்து வருகிறார். இந்த திரைப்படமே விஜய்யின் கடைசி திரைப்படமாக இருக்கும் என கூறுகிறார்கள்.

இந்த படத்தில் நடித்து முடித்து அடுத்ததாக விஜய் முழு நேர அரசியலில் ஈடுபட போகிறார். அதன் பிறகு சினிமாவுக்கு டாட்டா காட்டி விடுவார். எச் வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த திரைப்படத்திற்கு ராக்ஸ்டார் அனிருத் இசையமைக்கிறார்.

அடுத்த ஆண்டு அக்டோபர் மாதம் ரிலீஸ் நோக்கி உருவாகி வரும் இந்த திரைப்படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான கே வி என் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த திரைப்படத்தின் அடுத்த அடுத்த அப்டேட்டுகள் தொடர்ந்து வெளியான வண்ணம் இருக்கிறது .

இந்த திரைப்படத்தில் விஜய்க்கு வில்லனாக பிரபல பாலிவுட் நடிகரான பாபி தியோல் நடிக்கிறார். மேலும் படத்தில் முக்கிய கதா பாத்திரத்தில் கெளதம் வாசுதேவ் மேனன் நடிக்கிறார். விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடிக்க கமிட்டாகி இருக்கிறார்.

இதையும் படியுங்கள்: Divorce கூட்டம் எல்லாம் ஒண்ணா சேருது… ஆர்த்திக்கு ஆறுதல் கூறிய சைந்தவி!

இந்நிலையில் இன்று தளபதி 69 படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது. இதில் நடிகர் விஜய் நடிகை பூஜா ஹேக்டே மற்றும் வில்லன் நடிகரான பாபி தியோல் உள்ளிட்டோர் இந்த பூஜையில் கலந்து கொண்டனர். அதன் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ட்ரெண்ட் ஆகி வருகிறது.

  • Director Ram movies ஒரு படத்தில் 23 பாடல்களா…இயக்குனர் ராம் செதுக்கிய அற்புதமான படம்..சர்வேதச விழாவிற்கு தேர்வு..!