தளபதி 69-ல் இணைந்த வாரிசு நடிகை…! வீடு தேடி வந்த வாய்ப்பு..

Author: Selvan
21 November 2024, 1:46 pm

விஜய்யுடன் நடிக்க போட்டி போடும் நடிகைகள்

நடிகர் விஜய் தற்போது அரசியலில் இறங்கி உள்ளதால்,தன்னுடைய கடைசி படமான தளபதி 69 படத்தில் நடித்து வருகிறார் .

இப்படத்தை ஹெச் வினோத் இயக்குகிறார்.இப்படத்தில் நடிக்க விஜய் 275 கோடி சம்பளமாக வாங்கியுள்ளார் என்ற தகவலும் கூறப்பட்டது.

இதையும் படியுங்க: நீதிமன்றத்தில் ஐஸ்வர்யா…தனுஷுக்கு காத்திருந்த அதிர்ச்சி..! குழப்பத்தில் திரையுலகம்..

இப்படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார்.அவர்களுடன் மமிதா பைஜு, பிரகாஷ் ராஜ், பாபி தியோல் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

சில தினங்களுக்கு முன்னர் இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்கியது. முதலில் ஒரு பிரம்மாண்டமான பாடல் காட்சியை படமாக்கினார் இயக்குனர் வினோத். இப்போது செட் அமைத்து முக்கியமானக் காட்சிகளை எடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்தப் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க சரத்குமார் மகளான வரலக்ஷ்மி சரத்குமார் ஒப்பந்தம் ஆகியுள்ளார் என்ற தகவல் வந்துள்ளது.அவர் தற்போது சென்னை படப்பிடிப்பில் கலந்து வருகிறார்.

  • Why no action is taken even after filing a complaint against Vijay and Trisha விஜய், திரிஷா மீது புகார் கொடுத்தும் ஏன் ஆக்ஷன் எடுக்கல ? சீறிய பெண் பிரபலம்!