70வது படத்தில் விஜய்… இதாவது கடைசியா? மீண்டும் இணையும் மாஸ் கூட்டணி!

Author: Udayachandran RadhaKrishnan
23 October 2024, 6:52 pm

நடிகர் விஜய் ஹெச் வினோத் இயக்கத்தில் தளபதி 69வது படத்தில் இணைந்துள்ளார். இந்த படம்தான் கடைசி படம் என் விஜய் அறிவித்துள்ளார்.

அதன் பின் சினிமாவுக்கு முழுக்கு போட்டு 2026 தேர்தலில் களமிறங்க உள்ள தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியின் முதல் மாநாட்டு பணிகளில் கவனத்தை செலுத்த உள்ளார்.

இந்த நிலையில் விஜய் தனது 70வது படத்தில் நடிக்க உள்ளதாக சினிமா வட்டாரங்களில் தகவல் வெளியாகியுள்ளது. அட்லீ இயக்க உள்ள படத்தில் சிறப்பு தோற்றத்தில் விஜய் நடிக்க உள்ளதாகவும், இது டபுள் ஹீரோ சப்ஜெக்ட் என கூறப்படுகிறது.

ஏற்கனவே தெறி, மெர்சல், பிகில் என அட்லீ இயக்கத்தில் 3 மாஸ் படங்களை விஜய்யை வைத்து இயக்கி அட்லீ பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்திருந்தார்.

இதன் பின் ஷாருக்கானை வைத்து ஜவான் படத்தை எடுத்து இந்திய சினிமாவிலேயே அதிக வசூல் செய்த திரைப்படம் என்ற சாதனையை புரிந்துள்ளது.

இதையும் படியுங்க: பிரபல நடிகருக்கு சொன்ன கதையை திருடிய விஜய் : வீடியோ வெளியிட்டு விளாசும் ரஜினி ரசிகர்கள்!

இதையடுத்து அட்லீ, கமல் மற்றும் சல்மான் கானை வைத்து படம் எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

  • ajith kumar receive padma bhushan award from president நீங்க வேற மாதிரி சார்…நாட்டின் உயரிய விருதை பெற்றுக்கொண்டார் அஜித்!