ஜனநாயகன் கடைசி படம் அல்ல… சம்பவம் LOADING : இயக்குநரின் மாஸ் அறிவிப்பு!
Author: Udayachandran RadhaKrishnan4 February 2025, 6:18 pm
விஜய் தற்போது தீவிர அரசியலில் குதிக்க உள்ளார். தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை உருவாக்கிய அவர், தொடர்ந்து படங்களில் நடிக்க போவதில்லை என அறிவித்துள்ளார்.
விஜய்யின் 70வது படத்தை இயக்கும் லோகேஷ்
விஜய் நடிப்பில் கடைசி படம் என அறிவிக்கப்பட்டுள்ள ஜனநாயகன் படம் இந்த வருடம் அக்டோபர் வெளியாகும் என கூறப்படுகிறது. ஹெச் வினோத் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், பூஜா ஹெக்டே, பாபி தியோல், பிரகாஷ்ராஜ் என பலர் நடித்து வருகின்றனர்.
இதையும் படியுங்க : யுவன்சங்கர் ராஜாவை மேடையில் பங்கம் செய்த இளையராஜா.. ராஜா ராஜாதான் யா..!!
விஜய் கடைசி படம் என அறிவித்துள்ளதால் ரசிகர்கள் இந்த படத்திற்கு பயங்கர எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். இந்த நிலையில் விஜய் கடைசி படம் ஜனநாயகன் அல்ல என்ற ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
அதவாது, விஜய்யின் கடைசி படம் தளபதி 70 என்றும், இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளதாக உறுதிப்படுத்தும் தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே லோகேஷ் இயக்கத்தில் மாஸ்டர், லியோ என அடுத்தடுத்து 2 படங்கள் வெளியான நிலையில் மறுபடியும் 3வது முறையாக இந்த கூட்டணி இணைய உள்ளது குறிப்பிடத்தக்கது.