விஜயை பொழந்து கட்டிய கும்பல்…இது எப்போ நடந்துச்சு..அவரே சொன்ன சுவாரசிய தகவல்.!

Author: Selvan
13 February 2025, 2:38 pm

நண்பர்களுடன் அடிதடியில் ஈடுபட்ட விஜய்

விஜய் சினிமாவில் நடிகராக அறிமுகம் ஆகி பல ஹிட் படங்களை கொடுத்து,மக்கள் மத்தியில் மாஸ் நடிகராக வலம் வந்தார்.தன்னுடைய கரியரின் உச்சத்தில் இருக்கும் போது அவர் அரசியலையே கையில் எடுத்தார்.

இதையும் படியுங்க: ஆண்டியால் பறிபோன வாய்ப்பு..நடிகர் கரண் வீழ்ந்தது எப்படி…பிரபலம் சொன்ன அந்த தகவல்.!

இதனால் தற்போது அரசியலில் முழு கவனம் செலுத்தி வருகிறார்.இந்த நிலையில் விஜய் கல்லூரி படிக்கும் போது நடந்த ஒரு சம்பவத்தை பல வருடங்களுக்கு முன்பு ஜெயா டிவியில் பகிர்ந்திருப்பார்,அது தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Actor Vijay college incident

அந்த வீடியோவில் விஜயை பேட்டி எடுக்க அவரது வீட்டிற்கு சென்ற பெண்கள்,பல கேள்விகளை கேட்பார்கள்,அதில் நீங்கள் குறும்புத்தனமாக செய்த ஒரு விசயத்தை பற்றி சொல்லுங்க என கேட்ட போது,விஜய் அதற்கு ஒரு முறை என்னுடைய கல்லூரி நண்பர்கள் எல்லாம் டூருக்கு சென்றோம்,அப்போ ரயிலில் பயணம் செய்த போது எங்க கூட வந்த தோழிகளை பார்த்து அங்கிருந்த சில இளைஞர்கள் கிண்டல் அடித்தார்கள்,அவுங்க 4 பேர் நாங்க 10 பேர் அதனால ரயில்ல வச்சு அடி வெளுத்துவிட்டோம்.

ஆனால் அடுத்த ஸ்டேஷன் வந்தவுடன் ஒரு 40 பேர் உள்ளே புகுந்து எங்களை அடிக்க ஆரம்பிச்சுட்டாங்க,எப்படியோ மெசேஜ் பாஸ் பண்ணி அவுங்களுடைய நண்பர்களை கூப்டுட்டாங்க,அவுங்க அடிச்ச அடில என்னுடைய நண்பர் சிலர் கை,கால் எல்லாம் கட்டு போட்டு தான் வீட்டுக்கு போனாங்க,நாம அவுங்கள அடிக்காம இருந்திருந்தா இந்த பிரச்னையை வந்திருக்காது என நான் கூறினேன் என அந்த பேட்டியில் கல கலனு பேசியிருப்பார். தற்போது விஜயின் இந்த பழைய வீடியோ ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

  • முதல்ல பம்முறாங்க அப்றம் சட்டம் பேசுறாங்க..வேதனையில் ஃபயர் பட இயக்குனர்.!
  • Leave a Reply