அட போங்கப்பா… வாரிசு படத்தின் இசைவெளியீட்டுக்கான டிக்கெட்டின் விலை இவ்வளவா? – அப்செட்டில் ஃபேன்ஸ்..!
Author: Vignesh23 December 2022, 12:00 pm
நாளைய தீர்ப்பு படத்தின் மூலம் அறிமுகமான விஜய், 90களின் பிற்பாதியில் வெளியான படங்கள் பெரும் ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார். இறுதியாக, இவர் நடிப்பில் வெளியான மாஸ்டர், பீஸ்ட் இரண்டு படங்களுமே கலவையான விமர்சனங்களை பெற்றது.

தற்போது, அதனைத் தொடர்ந்து, தில் ராஜூ தயாரிப்பில் வம்சி இயக்கத்தில் விஜய், ரஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகும் திரைப்படம் வாரிசு.
இப்படத்தில் பிரபு, பிரகாஷ் ராஜ், சங்கீதா, சம்யுக்தா, ஷ்யாம், யோகி பாபு, தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த் என ஒரு பிரபல நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது. தமிழ், தெலுங்கு என ஒரே நேரத்தில் இரு மொழிகளில் உருவாகி வரும் நிலையில், இப்படம் மூலம் நேரடியாக டோலிவுட்டிற்கு என்ட்ரி கொடுக்கிறார் விஜய்.
வாரிசு படம் வரும் பொங்கலுக்கு வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தளபதி விஜய் மற்றும் MM மானஸ்வி குரலில் ‘ரஞ்சிதமே’, சிம்பு குரலில் ‘தீ தளபதி’ என 2 பாடல்கள் வெளியாகி சூப்பர் ட்ரெண்ட் ஆகி வருகிறது. கடந்த மாதம் 5ம் தேதி வாரிசு படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரஞ்சிதமே ரஞ்சிதமே வெளியாகி, யூடியூப்பில் பல மில்லியன் வீவ்ஸ்களை கடந்து புதிய சாதனை படைத்தது.
வாரிசு படத்துக்கு போட்டியாக அஜித்தின் துணிவு திரைப்படமும் ரிலீசாக உள்ளது. இதனால் இருவருக்கும் சமமான அளவில் திரையரங்குகள் ஒதுக்கீடு செய்யப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டது.
இந்த நிலையில் வாரிசு படத்தில் விஜய்க்கு இன்ட்ரோ பாடல் ஒன்று உள்ளது. அந்த பாடல் ஆடியோ வெளியாகும் 24ஆம் தேதியே வெளியிடப்படும். அதுவும் நேரலையில் என தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், வாரிசு திரைப்படத்தின் இசைவெளியீட்டுக்கான டிக்கெட் பரபரப்பாக விற்றுவரும் நேரத்தில், ஒரு டிக்கெட் 4000 ரூபாய்க்கு விற்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த தகவலால் விஜய்யின் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இணையத்தில் வெளியாகி உள்ள இந்த தகவல் எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை.