வாரிசு படத்தை இங்கிலாந்தில் வெளியிடும் நிறுவனம், அப்படத்திற்கான டிக்கெட் முன்பதிவை ஒரு மாதத்திற்கு முன் தொடங்க இருப்பதாக அறிவித்து உள்ளது.
பொங்கல் பண்டிகைக்கு விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் ரிலீசாக உள்ளது. வம்சி இயக்கியுள்ள இப்படத்தை தில் ராஜு தயாரித்துள்ளார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருக்கிறார்.
மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். அவரது இசையில் இதுவரை இரண்டு பாடல்கள் வெளியாகி உள்ளன.
இதில்விஜய் முதலில் வெளியான ரஞ்சிதமே பாடலை பாடியிருந்தார். அதேபோல் கடந்த வாரம் வெளிவந்த தீ தளபதி என்கிற பாடலை நடிகர் சிம்பு பாடியது மட்டுமின்றி அதற்காக உருவாக்கப்பட்ட புரோமோ வீடியோவில் நடனமாடியும் அசத்தி இருந்தார்.
இவ்வாறு இப்படம் குறித்த அப்டேட்டுகள் ஒருபக்கம் வந்தாலும், படத்தின் ரிலீஸ் பணிகளும் மறுபுறம் ஜோராக நடந்து வருகிறது.
அஜித்தின் துணிவு படத்துக்கு போட்டியாக வாரிசு படம் ரிலீஸ் ஆவதால், வசூலில் யார் வெற்றிவாகை சூடப்போவது என்கிற எதிர்பார்ப்பும் இருந்து வருகிறது. பெரும்பாலும் இந்த இரண்டு படங்களுக்கும் சமமான அளவில் திரையரங்குகள் ஒதுக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், வாரிசு படத்தின் முன்பதிவு எப்போது தொடங்கும் என்பது குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
அதன்படி வாரிசு படத்தை இங்கிலாந்தில் வெளியிடும் நிறுவனம், அப்படத்திற்கான டிக்கெட் முன்பதிவை ஒரு மாதத்திற்கு முன், அதாவது அடுத்த வாரம் தொடங்க இருப்பதாக அறிவித்து உள்ளது. ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் அவதார் 2 படத்தின் முன்பதிவு அடுத்த வாரம் வெளியாக உள்ள கடந்த மாதமே தொடங்கப்பட்டது.
தற்போது அதே பார்முலாவை பின்பற்றி இங்கிலாந்தில் மட்டும் வாரிசு படத்திற்கான டிக்கெட் முன்பதிவு ஒரு மாதத்திற்கு முன்னரே தொடங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
2 வருடமாக நடிகை ராஷி கண்ணாவுடன் பழகி வருவதாகவும், அவர் சத்தியம் செய்து கொடுத்ததை பிரபல நடிகராக ஓபன் கூறியுள்ளார்.…
சென்னையில், இன்று (பிப்.25) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 20 ரூபாய் உயர்ந்து 8 ஆயிரத்து 75 ரூபாய்க்கு…
நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகுவதாக, ராணிப்பேட்டை மாவட்டச் செயலாளர் பாவேந்தன் அறிவித்துள்ளது கட்சியினுள் பேசுபொருளாகியுள்ளது. ராணிப்பேட்டை: நாம் தமிழர்…
ஏப்ரலில் வெளியாகவுள்ள குட் பேட் அக்லி படம் மீது அஜித்குமார் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றனர். சென்னை: மைத்ரி…
தியேட்டரை காலி பண்ணும் விடாமுயற்சி அஜித் நடிப்பில் வெளிவந்த விடாமுயற்சி திரைப்படத்தின் OTT ரிலீஸ் தேதியை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.இதனால்…
மாணவர்களை கெடுக்கும் சினிமா தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளிவந்த புஷ்பா திரைப்படம் மாணவர்களின் மனநிலையை கெடுத்து வைக்கிறது…
This website uses cookies.